Saturday, November 25, 2023

TNPSC | How To Apply

 முதலில் தேர்வு குறித்தான விவரங்கள்(recruitment details ) இருக்கும். இதனைப் படித்து பார்த்து save and continue கொடுக்க வேண்டும்.


* பின் புகைப்படம், கையொப்பம், போட்டோ இவற்றை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். புகைப்படம் சமீபத்தில் எடுத்ததாக இருத்தல் நல்லது. அடுத்து applicant details. இதில் one time registration-ல் நீங்கள் கொடுத்த விவரங்கள் இருக்கும். அதனை சரிபார்த்துக்கொள்ளவும். தொடர்ந்து, கீழே உங்கள் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படும், அதனை நிரப்பவும்.

*அடுத்து communication details கேட்கப்படும். அது one time registration-ல் இருந்து தானாக நிரப்பப்பட்டிருக்கும்; சரியாக உள்ளதா எனப் பார்த்துவிட்டு அடுத்த பக்கத்திற்குச் செல்லவும்.


*அடுத்து special category certificate details, educational details இருக்கும். இவற்றை நிரப்பிய பின் அடுத்த பக்கம் ஓபன் ஆகும்.


* அடுத்த பக்கத்தில் தமிழ் வழியில் படித்ததற்கான இட ஒதுக்கீடு கோருகிறீர்களா என்று கேட்கப்படும். இங்கு, நீங்கள் கல்லூரி வரை தமிழில் பயின்றுள்ளீர்கள் என்றால் ஆம் எனக் கொடுக்கவும். அதன் கீழே, எந்த வகுப்பு வரை பயின்றுள்ளீர்கள் என்பதற்கான விவரங்கள் கேட்கப்படும். 

அதனை நிரப்பி save கொடுத்த பின் அதற்கான விவரங்கள் கேட்கப்படும். அனைத்தையும் பொறுமையாக நிரப்ப வேண்டும். முன்னதாக, நீங்கள் படித்த பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து தமிழில் படித்ததற்கான சான்றிதழ்(PSTM - Person Studied in Tamil Medium) பெற்றிருக்க வேண்டும். 

ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை, 12-ம் வகுப்பு, கல்லூரி எனத் தனி தனியாக நிரப்ப வேண்டும். பள்ளியின் பெயர், சான்றிதழ் கொடுத்தவர், சான்றிதழ் பெற்ற தேதி என அனைத்தும் கேட்கப்படும்.


No comments:

Post a Comment