TNPSC கால்நடை மேலாளர் பணி – நுழைவுசீட்டு எப்போது?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கால்நடை பராமரிப்பு சேவையில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான காலியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் இதற்கான நுழைவு சீட்டு குறித்து தேர்வர்கள் மத்தியில் காத்திருப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி கால்நடை பராமரிப்பு பணி:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு லிமிடெட் – ல் கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மேலாளர் பணிகளுக்கு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு அக்டோபர் 19ஆம் தேதியான இன்றுடன் விண்ணப்ப அவகாசம் முடிவடைகிறது. அக்டோபர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்ப திருத்த சாளரத்திற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு கட்ட நடைமுறைகளின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாதம் ரூ.55,500-2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று இப்பணிக்கான எழுத்துத் தேர்வுகள் தொடங்க உள்ளது. இதனால் டிசம்பர் முதல் வாரத்தில் கால்நடை மேலாளர் பணிக்கான தேர்வின் நுழைவு சீட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் இது குறித்த உடனடி தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment