TNPSC தேர்வர்களுக்கான – பல்வேறு பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension), Combined Geology Subordinate Service Examination, Junior Scientific Officer மற்றும் Forest Apprentice ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
TNPSC தேர்வு முடிவுகள்:
தமிழ்நாடு வேளாண்மையில் Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension) பதவிகளுக்கு 1:3/1:4 என்ற விகிதத்தில் திரையில் சான்றிதழ் சரிபார்ப்பில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண் கொண்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு . 20.05.2023 FN & AN மற்றும் 21.05.2023 FN & AN அன்று நடத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த புவியியல் துணைப் பணித் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு 18.08.2023 அன்று எழுத்துத் தேர்வு (கணினி அடிப்படையிலான தேர்வு) தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. 1:3/1:4 என்ற விகிதத்தில் திரைச் சான்றிதழ் சரிபார்ப்பில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண் பட்டியல் TNPSC அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு தடய அறிவியல் துணைப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரி பதவிக்கு 1:3/1:4 என்ற விகிதத்தில், தேர்வானார் பட்டியல் 3.07.2023 அன்று ஆணையத்தால் நடத்தப்பட்ட (கணினி அடிப்படையிலான தேர்வு) FN & AN அடிப்படையில் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு வனத் துணைப் பணியில் வனப் பயிற்சியாளர் பதவிக்கான இயற்பியல் தேர்வில் (நடைபயிற்சி) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண் பட்டியல் 01.08.2023 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இவர்களுக்கான CBT தேர்வு 04.12.2022 முதல் 09.12.2022, 11.12.2022 மற்றும் 27.12.2022 வரை நடத்தப்பட்டது. அதன் பின் நடைபெற்ற PHYSICAL தேர்வில் தகுதியானோர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அவர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள திரைச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1:4 என்ற விகிதத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment