Sunday, October 29, 2023

TNPSC குரூப் VIIB தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 !!

 TNPSC குரூப் VIIB தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 !!

TNPSC LATEST NEWS


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது இந்து சமய அறநிலையத்துறையில் குரூப் VIIB கீழ்வரும் செயல் அலுவலகர் நிலை – III பணிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கான தேதி மற்றும் அழைப்பு கடிதத்தை தற்போது வெளியிட்டுள்ளது. இதைப் பற்றிய விரிவான தகவல்கள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.


TNPSC குரூப் VIIB 2023:

இந்து சமய அறநிலையத்துறை சார்நிலைப் பணிகள் குரூப் VIIB கீழ்வரும் செயல் அலுவலகர் (நிலை – III) பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 19.05.2022 அன்று TNPSC-யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கான எழுத்துத்தேர்வானது கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவும், மதிப்பெண் பட்டியலும் 07.07.2023 அன்று வெளியிடப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக எழுத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு குறித்த அறிவிப்பானது இன்று (27.10.2023) வெளியிடப்பட்டுள்ளது.


இந்த சான்றிதழ்கள் சரிபார்ப்பானது 6.11.2023 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண் 3, தேர்வாணையச் சாலை, சென்னை – 600 003 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலமே தேர்வர்கள் தங்களது அழைப்பு கடிதத்தை ஆன்லைனில் பெற முடியும். தேர்வர்களுக்கு அழைப்பு கடிதம் குறுஞ்செய்தி மற்றும் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

CV NOTIFICATION PDF

No comments:

Post a Comment