TNPSC CESE தேர்வு அறிவிப்பு 2023 – 368 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கான 368 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வு கீழ் Assistant Engineer, Assistant Director, Senior Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 368 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.36,400/- முதல் ரூ.2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
Registration Fee – ரூ.150/-
Examination Fee – ரூ.200/-
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
No comments:
Post a Comment