Tuesday, October 31, 2023

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் அறிவிப்பு!!

 TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் அறிவிப்பு!!

tnpsc group 2 results


குரூப் 2 தேர்வு முடிவுகள் பல மாதங்களாக வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில் எப்போது முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

 குரூப் 2 தேர்வு:

தமிழகத்தில் நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவடைந்து கிட்டத்தட்ட 1 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரையிலும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில், தேர்வெழுதிய 57,093 பேரும் தேர்வு முடிவுகளுக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.


அதாவது, தேர்வர்கள் எழுத்து வடிவில் விடைகளை எழுதியுள்ள நிலையில் விடைத்தாள்களை கணினி வழியில் திருத்தம் செய்வதால் காலதாமதம் ஆவதாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பல மாதங்களாக குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இருக்கும் நிலையில் அடுத்தடுத்து பணியில் சேருவதிலும் அதிக கால தாமதம் ஏற்படுகிறது. இதனால், தேர்வாளர்களுக்கு நிதி சுமை ஏற்படுவதாகவும், வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் மன உளைச்சலில் இருப்பதாகவும், உடனடியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.



No comments:

Post a Comment