இந்திய தேசிய இயக்கம்- தலைவர்கள் உருவாகுதல் - ஜவஹர்லால் நேரு பற்றிய சில முக்கிய குறிப்புகள்...
காலம் : 14.11.1889-27.05.1964
பிறப்பு : அலகாபாத்
பெற்றோர் : மோதிலால் நேரு சொரூபராணி.
தந்தை : சுயராஜ்ய கட்சியின் நிறுவனர்.
சிறப்பு : நவீன இந்தியாவின் சிற்பி, ரோஜாவின் ராஜா, இந்தியாவின் ஆபரணம்.
வாழ்க்கை வரலாறு:
1912 - இல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார் .
1916 - லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் காந்தியை முதன்முதலாக சந்தித்தார்.
1916 - இல் கமலா கவுல் என்பவரை மணந்தார் .
1917 - நவம்பர் 19 அன்று இந்திர பிரியதர்ஷினி பிறந்தார் .
1919 - இல் கிஷான் சபையின் துணைத் தலைவர் ஆனார்.
1919 - 1932 - வரை தி இண்டிபெண்டன்ட் என்ற செய்தித்தாளை நடத்தினார்.
1920 - காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் நேரு முதல்முறையாக சிறைக்குச் சென்றார்.
வாழ்நாளில் ஒன்பது வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டி வந்தது சிறையில் இருந்த நாட்களில் நேரு உலக வரலாற்றின் காட்சிகள்(1934) , சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்கள் எழுதினார்.
1923 - இந்திய தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர்.
1929 - லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். பூர்ண சுயராஜ்யம் தீர்மானத்தை நிறைவேற்றினார் .
1937- பைசூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை ஏற்றார்.
1940 - தனிநபர் சத்தியாகிரகத்தின் போது ஆச்சாரிய வினோபாவிற்கு அடுத்து இரண்டாவதாக கைது செய்யப்பட்டார்.
தனது சுயசரிதியை "ஏன் ஆட்டோ பயோகிராபி" என்ற தலைப்பில் எழுதினால்.
1947 -ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்த போது "விதியோடு செய்து கொண்ட ஒப்பந்தம்" என இந்தியா பாகிஸ்தான் பிரிவினையும் "உலகம் உறங்கும் போது இந்தியா விழித்துக் கொண்டது" எனவும் வர்ணித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக மவுண்ட் பேட்டர்ன் பிரபுவால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார் .
நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகையை நடத்தியவர்.
நேருவின் பொன்மொழிகள்:
1935 ஆம் ஆண்டு இந்திய சட்டம் ஒரு அடிமைப்பட்டயம்.
விதியோடு செய்து கொண்ட ஒப்பந்தம்.
உலக மக்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது இந்தியா விழித்துக் கொண்டது.
காலம் பொன் போன்றது.
நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது.
வேற்றுமையில் ஒற்றுமை.
நேருவின் படைப்புகள்
1.உலக வரலாற்றின் பார்வை 1934
2.தி யூனிட்டி ஆப் இந்தியா 1941.
3.தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா 1946.
No comments:
Post a Comment