Thursday, October 26, 2023

தமிழகத்தில் மாதம் ரூ.1,00,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலை

 தமிழகத்தில் மாதம் ரூ.1,00,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலை 

Job notification


முதுகலை பட்டதாரிகளுடன் 03 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள மருத்துவப் பயிற்சியாளர்கள், அயனாவரத்தில் உள்ள ESIS மருத்துவமனையில் பதினொரு மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேர சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டராகப் பணியாற்ற புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ESIC மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:

Urology, Medical Gastroenterology, Nephrology, Surgical Gastroenterology மற்றும் Cardiology ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.


Super Specialist கல்வி தகுதி:

  Urology  - MCH/DNB Urology

  Medical Gastroenterology -  DM/ DNB MGE

  Nephrology -  DM/ DNB Nephrology

  Surgical Gastroenterology -  MCH/ DNB SGE

  Cardiology -  DM/ DNB Cardiology

சம்பள விவரம்:

ஒரு நாளைக்கு 4 மணிநேர அமர்வுக்கு மாதம்

வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. அவசர அழைப்பின் போது வருகைக்கான கட்டணம் ரூ.20000/- வழங்கப்பட உள்ளது.


வயது வரம்பு:

63 வயது வரை உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 16.11.2023 நடைபெற உள்ளது.


நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் முழு பயோடேட்டா, தேவையான சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்: ESIC Regional Office, 143, Sterling Road, Nungambakkam, Chennai – 34

நேர்காணல் நடைபெறும் தேதி: 16-11-2023 காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை


No comments:

Post a Comment