Monday, September 11, 2023

இந்தியா - அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு SCHEDULE 1 PART 2 NOTES

 இந்தியா - அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு SCHEDULE 1 PART 2 NOTES

Tnpsc gk geography


இந்தியாவின் முக்கிய இயற்கை அமைப்பு பிரிவுகள்

இந்தியா 

வடக்கே இமயமலை 

தெற்கு கடற்கரை 

மேற்கு பாலைவனம் 

கிழக்கு இயற்கை பாரம்பரியத்தைக் கொண்டது.

இந்தியாவின் இயற்கை அமைப்பை ஆறு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

வடக்கு மலைகள்

           இமயமலைகள் உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத்தொடர்கள் ஆகும்.

           மடிப்பு மலைகளாக உருவாகியுள்ளன.

          மேற்கில் சிந்து பள்ளத்தாக்கில் இருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை சுமார் 2500 கிலோமீட்டர் நீளத்திற்கு மீண்டும் பரவியுள்ளது.

        காஷ்மீர் 500 கிலோ மீட்டர் அகலத்துடனும்

      அருணாச்சலப் பிரதேசத்தில் 200 கிலோமீட்டர் அகலத்திலும் வேறுபடுகிறது.

      ஆசியாவின் உயரமான மலைத்தொடரையும் இமயமலையையும் இணைக்கும் பகுதி பாமீர் முடிச்சு ஆகும் இது உலகின் கூரை என்று அழைக்கப்படுகிறது.

      இமாலயா என்ற சொல் சமஸ்கிருத மொழியில் பனி உறைவிடம் என அழைக்கப்படுகிறது.

இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்

1. ட்ரான்ஸ் மலைகள் மேற்கு இமய மலைகள்

இம்மலை ஜம்மு காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.

இம்மலை திபத்தில் அதிகமாக இருப்பதால் திபெத்தியன் இமயமலை என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், லடாக் கைலாஷ் மற்றும் காரகோரம் ஆகும்.

2. இமய மலை

   வடக்கே இருந்த யுரேசியா நிலப்பகுதியும் தெற்கே இருந்த கோண்டுவானா நிலைப்பகுதியும் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையில் இருந்த டெத்திஸ் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது.

இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது

  • உள் இமய மலைகள் / ஹிமாத்ரி
  • மத்திய இமயமலை /இமாச்சல்
  • வெளி இமயமலை / சிவாலிக்

உள் இமயமலை அல்லது ஹிமாத்ரி

சராசரி அகலம் 25 கிலோமீட்டர் சராசரி உயரம் 6000 மீட்டர் ஆகும்.

சிறிய இமயமலை மற்றும் சிவாலிக்குன்றுகளை ஒப்பிடும்போது இப்பகுதி குறைவான மழையை பெறுகின்றது.

மற்ற மலைத்தொடர்களை ஒப்பிடும்போது இப்பகுதியில் பௌதீக சிதைவே உள்ளது.

இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பாலானவை இம்மலை தொடரில் அமைந்துள்ளன அவை

 எவரெஸ்ட் 8848 மீ - நேபாளம்

 கஞ்சன் ஜங்கா 8586 மீ - நேபாளம் மற்றும் சிக்கிம்க்கு இடையே.

நிரந்தரமாக பனி சூழ்ந்து காணப்படுவதால் கங்கோத்திரி, சியாச்சியின் போன்ற பனி ஆறுகள் காணப்படுகின்றன.

மத்திய இமய மலைகள் அல்லது இமாச்சல்

சராசரி அகலம் 80 கிலோமீட்டர் சராசரி உயரம் 3500 மீட்டர் முதல் 4500 மீட்டர் வரை.

மலைத்தொடரில் பீர் பாஞ்சல், தவ்லதார் மற்றும் மகாபாரத் ஆகிய மலைகள் காணப்படுகின்றன.

புகழ்பெற்ற கோடை வாழிடங்களான சிம்லா, நைனிடால் ,முசௌரி அல்மோரா ,ராணி கட் மற்றும் டார்ஜிலிங் போன்றவை இம்மலை தொடரில் அமைந்துள்ளன.

வெளி இமயமலை அல்லது சிவாலிக்

மலைத்தொடரானது ஜம்மு காஷ்மீரில் இருந்த அஸ்ஸாம் வரை பரவி காணப்படுகிறது .

இதன் சராசரி உயரம் 1000 மீட்டர் ஆகும்.

 இதன் சராசரி அகலம் ஆனது மேற்கில் 50 கிலோமீட்டர் முதல் கிழக்கில் 10 கிலோமீட்டர் வரையும் மாறுபடுகிறது.

சிறிய இமய மலைக்கும் வெளிப்புற இமய மலைக்கும் இடையில்.

கிழக்குப் பகுதி டூயர்ஸ் 

மேற்கு பகுதி டூன்கள்.

3. பூர்வாஞ்சல் குன்றுகள்

இவை இமயமலையின் கிழக்கு கிளையாகும்.

டாப்ல ,அபோர் ,மிஸ்மி, பட்காய்பம், நாகா, மாணிப்பூர், காரோ, காசி மற்றும் ஜெயந்த்ரா குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று அழைக்கப்படுகின்றது.

இமயமலையின் முக்கியத்துவம்

  • தென்மேற்கு பருவக்காற்று வட இந்திய பகுதிக்கு கனமழையை கொடுக்கிறது.
  • வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது எடுத்துக்காட்டு சிந்து கங்கை ,பிரம்மபுத்திரன் மற்றும் பல ஆறுகள்.
  • பல கோடை வாழிடங்களும் புனித தலங்களான அமர்நாத் கேதர்நாத் பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவி கோயில்களும் இம்மலை தொடரில் அமைந்துள்ளன.
  • வனப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
  • இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.

Tnpsc gk geography






No comments:

Post a Comment