இந்தியாவின் வடிகாலமைப்பு NOTES - இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு
முதன்மை ஆறுகளும் துணையாறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு வடிகால் கொப்புரை என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் அமைவிட அடிப்படையில் வடிகால் அமைப்பை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் அவை
இமயமலையில் தோன்றும் ஆறுகள்
தீபகற்ப இந்திய ஆறுகள்
இமயமலையில் தோன்றும் ஆறுகள்
வடக்கே உள்ள இமயமலையில் இந்த ஆறுகள் உற்பத்தியாவதால் இமயமலை ஆறுகள் என்று அழைக்கப்படுகின்றன.
இவை வற்றாத ஜீவநதிகள் ஆகும்
சிந்து நதி தொகுப்பு
சிந்துநதி 2850 கிலோமீட்டர் நீளத்துடன் உலகில் உள்ள நீளமான நதிகளில் ஒன்றாக திகழ்கிறது .
இந்தியாவில் மட்டும் 709 கிலோமீட்டர் நீளம் பாய்கிறது.
திபெத் பகுதியில் உள்ள கைலாஷ் மலை தொடரின் வடக்கு சரிவில் மானசரோவர் ஏரிக்கு அருகில் 5150 மீட்டர் உயரத்தில் உற்பத்தி ஆகிறது.
லடாக் மற்றும் ஜாஸ்கர் மலைத்தொடர் வழியாக பாய்ந்து குறுகிய மலை இடுக்குகளை உருவாக்குகிறது ஜம்மு காஷ்மீர் வழியாக பாய்ந்து பின் பின்புறமாக பாகிஸ்தானின் சில்லார் பகுதியில் நுழைந்து பின் அரபிக் கடலில் கலக்கிறது.
துணையாறுகள்
ஜீலம், சீனாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லஜ். சிந்து நதியின் மிகப்பெரிய துணையாறு சீனாப் ஆகும்.
கங்கை
கங்கை ஆற்றின் தொகுப்பு 8 லட்சத்தி 694 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்பையும் இந்தியாவின் மிகப்பெரிய வடிவில் அமைப்பை கொண்டதாகும் .
கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் 710 மீட்டர் உயரத்தில் கங்கோத்திரி பணியாற்றிலிருந்து பாகிதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது இந் நதியின் நிலம் சுமார் 2525 கிலோமீட்டர் ஆகும்.
துணை ஆறுகள்
வடபகுதி கோமதி காக்ரா கண்டக் கோசி
தென்பகுதி யமுனை சோன்சாம்பல்
வங்காள தேசத்தில் கங்கை பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
கங்கை மற்றும் பிரம்மபுத்திர ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
பிரம்மபுத்திரா
திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரிக்கு கிழக்கே கைலாஷ் மலைத்தொடரில் உள்ள செம்மாயுடங் என்ற பணியாற்றில் சுமார் 5150 மீட்டர் உயரத்தில் இருந்து உற்பத்தியாகிறது .
தீபெத் பகுதியில் சாங்கோ தூய்மை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு நீளம் சுமார் 2900 கிலோமீட்டர் முதல் 900 கிலோ மீட்டர் மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.
பிரம்மபுத்திரா ஆறு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திகாங் என்ற மலை இடுப்பின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது.
துணை ஆறுகள்
மனாஸ், பராக், சுபன்ஸ்ரீ ,திஸ்டா
வங்காளதேசத்தில் ஜமுனா எனவும் கங்கை ஆற்றுடன் இணைந்து போது மேக்னா எனவும் அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment