தீபகற்ப இந்திய ஆறுகள் NOTES - இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு
தென்னிந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் எனப்படுகின்றன பெரும்பாலான ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகின்றன இவை பருவ கால ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள் எனப்படும்.
கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
மகாநதி
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்காவிற்கு அருகில் உற்பத்தியாகி ஒடிசா மாநிலத்தின் வழியாக சுமார் 851 கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.
துணை ஆறுகள் சீநாத், டெலன் ,சந்தூர், சித்ரட்லா, கெங்குட்டி மற்றும் நன்.
வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கோதாவரி
தீபகற்ப இந்தியாவின் பாயும் மிக நீளமான ஆளான கோதாவரி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகிறது ஆந்திர பிரதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிவராவில் கலக்கிறது
துணையாறுகள் பூர்ணா ,பென்கங்கா பிரணிதா, இந்திராவதி ,தால் மற்றும் சாலாமி.
இந்நதி ராஜமுந்திரிக்கு அருகில் கௌதமி மற்றும் வசிஷ்ட என இரண்டு கிளைகளாகப் பிரிந்து பெரிய டெல்டாவை உருவாக்குகிறது. கோதாவரி டெல்டா பகுதியில் நன்னீர் ஏரியான கொல்லேறு ஏரி அமைந்துள்ளது.
கிருஷ்ணா
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகாபலேஸ்வரர் என்ற பகுதியில் ஊற்றாக உருவாகி சுமார் 1400 கிலோ மீட்டர் நீளம் வரை பாய்கிறது.
தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது பெரிய நதியாகும்.
துணை ஆறுகள்
கொய்னா, பீமா ,முசி ,துங்கபத்ரா மற்றும் பெடவாறு.
ஆந்திர பிரதேசத்தின் வழியாக பாய்ந்து ஹிம்சலா தேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
காவிரி
காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகுமலையில் உள்ள தலைக்காவிரியில் உற்பத்தியாகி சுமார் 800 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.
தென்னிந்தியாவின் கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
கர்நாடகாவில் இரண்டாகப் பிரிந்து சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய புனிதா ஆற்று தீவுகளை உருவாக்குகிறது.
பின்பு தமிழ்நாட்டின் நுழைந்து தொடர்ச்சியான மற்றும் வழியாக ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியாக பாய்கிறது பின்பு திருச்சிராப்பள்ளிக்கு முன் ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் மற்றும் காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிந்த இறுதியில் பூம்புகார் என்ற இடத்தில் வங்க கடலில் கலக்கிறது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
நர்மதை
மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்க்கண்டார் பீடபூமியில் 157 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி 1312 கிலோமீட்டர் நீளத்தில் பாய்கிறது இது 27 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு நீண்ட கழிமுகத்தை உருவாக்கி வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் நீளமானது.
துணையார்கள் பர்னா ,ஹலுன் ,பஞ்சர், தூதி, சக்கார், டவா மற்றும் கோலார்.
தபதி
தபதி ஆறு தீபகற்ப இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும்.
இந்நதி 724 கிலோமீட்டர் நீளத்தை கொண்டுள்ளது இந்நதி மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்ரோ மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 750 மீட்டர் உயரத்தில் முல்டாய் என்ற இடத்தில் இருந்து உற்பத்தியாகிறது.
தீபகற்ப இந்திய ஆறுகளில் நர்மதை, தபதி மற்றும் மாகி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாய்கின்றனர்.
துணை ஆறுகள்
வாகி ,கோமை ,அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா ,போரி.
No comments:
Post a Comment