Monday, September 11, 2023

கடற்கரை சமவெளிகள் NOTES- இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு

 கடற்கரை சமவெளிகள் NOTES-  இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு 

tnpsc gk geography



கடற்கரை சமவெளிகள்

இந்திய தீபகற்ப பீடபூமி கூறுகளான வேறுபட்ட அகலத்தை உடைய வடக்கு தெற்கு அமைந்துள்ள கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது.

 இந்திய கடற்கரை சமவெளிகளை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்

1.மேற்கு கடற்கரை சமவெளி 

2.கிழக்கு கடற்கரை சமவெளி

மேற்கு கடற்கரை சமவெளி

மேற்கு கடற்கரை சமவெளி மேற்கு தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையே அமைந்துள்ளது .

இது வடக்கில் உள்ள ரான் கட்சி முதல் தெற்கில் உள்ள கன்னியாகுமரி வரை நீண்டு 10 கிலோமீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் வரை அகலம் கொண்டதாகும்.

மேற்கு கடற்கரையின் வட பகுதி கொங்கண கடற்கரை எனவும், மத்திய பகுதி கனரா கடற்கரை எனவும், அழைக்கப்படுகிறது தென்பகுதி மலபார் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

ஆளமில்லாத பல காயல்கள், உப்பங்கழிகள் மற்றும் டெரிஸ் போன்றவை காணப்படுகின்றன.

 வேம்பநாடு ஏரி பகுதியில் உள்ள ஒரு முக்கியமான ஏரியாகும்..

கிழக்கு கடற்கரை சமவெளி

கிழக்கு கடற்கரை சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாக்கும் இடையே மேற்கு வங்காளம் ஒடிசா ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு வரை நீந்துள்ளது .

மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்ட பகுதி வட சர்க்கார் எனவும்.

 கிருஷ்ணா மற்றும் காவிரி நதிக்கு இடைப்பட்ட பகுதி சோழமண்டல கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது .

மகாநதி டெல்டா விற்கு தென்மேற்கே அமைந்துள்ள சிலிகாய் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரியாகும். 

கோதாவரி ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடையே கொல்லேறு ஏரி அமைந்துள்ளது.

 தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச எல்லையில் பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது.


No comments:

Post a Comment