தீவுகள் NOTES - இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு
தீவுகள்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் என இரண்டு பேரும் தீவுக் கூட்டங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன.
572 தீவுகளை கொண்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் வங்காள விரிகுடாவிலும்.
27 தீவுக் கூட்டங்களை கொண்ட லட்சத்தீவுகள் அரபிக் கடலிலும் அமைந்துள்ளன.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் புவி உள்ள இயக்க விசைகள் மற்றும் எரிமலைகளால் உருவானதாகும்.
இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் உள்ள பாரன் தீவாகும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
இத்தீவின் பரப்பளவு 8249 சதுர கிலோமீட்டர் ஆகும்.
வடபகுதி தீவுகள் அந்தமான் எனவும்,
தென்பகுதி தீவுகள் நிக்கோபர் எனவும் அழைக்கப்படுகின்றன .
நிர்வாக தலைநகரம் போர்ட் பிளேயர் ஆகும் .
அந்தமான் தீவுக் கூட்டங்களை நிக்கோபர் தீவுக் கூட்டங்களில் இருந்து 10° கால்வாய் பிரிக்கிறது. நிக்கோபரின் தென்கோடி முனை இந்திரா முனை என்று அழைக்கப்படுகிறது.
லட்சத்தீவுகள்
இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள லட்சத்தீவு முருகை பாறைகளால் ஆனது .
இதன் நிர்வாக தலைநகரம் கவரட்டி .
லட்சத்தீவு கூட்டங்களை 8° கால்வாய் மாலத்தீவில் இருந்து பிரிக்கிறது
இங்கு மனிதர்கள் வசிக்காத பிட் தீவு பறவைகள் சரணாலயத்திற்கு பெயர் பெற்றது .
லட்சத்தீவு மினிக்காய் மற்றும் அமினித் தீவு கூட்டங்கள் 1973 ஆம் ஆண்டு முதல் லட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment