தீபகற்ப பீடபூமிகள் NOTES - இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு
தீபகற்ப பீடபூமிகள்
தீபகற்ப பீடபூமி வட இந்திய சமவெளிக்கு தெற்கே அமைந்துள்ளது.
இது சுமார் 16 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் பாதியாகும்.
வடமேற்கே - ஆரவல்லி மலைத்தொடர்
வடக்கு மற்றும் வடகிழக்கு -பண்டல்கண்ட் உயர்நிலைப்பகுதி கைமூர் ,ராஜ் மஹால் குன்றுகள்.
மேற்கே - மேற்கு தொடர்ச்சி மலைகள்
கிழக்கே - கிழக்கு தொடர்ச்சி மலைகள் ஆகியன இவ்பீடபூமியின் எல்லைகளாக அமைந்துள்ளன.
இவ்பீடபூமியின் பெரும் பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தைக் கொண்டது.
ஆனைமலையில் அமைந்துள்ள 2695 மீட்டர் உயரம் உடைய ஆனைமுடி சிகரம் இவ்பீட பூமியின் உயர்ந்த சிகரம் ஆகும்.
நர்மதை ஆறு தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கின்றது .
இதன் வடபகுதி மத்திய உயர்நிலங்கள் என்றும் ,
தென்பகுதி தக்காண பீடபூமி என்றும் அழைக்கப்படுகிறது.
மத்திய உயர்நிலங்கள்
மத்திய உயர்நிலங்கள் நர்மதை ஆற்றிற்கும் வடபெறும் சமவெளிக்கும் இடையே அமைந்துள்ளது.
இப்பகுதியின் வடக்கு மற்றும் வடமேற்கு எல்லையில் ஆரவல்லி மலைத்தொடர் அமைந்துள்ளது .
ஆரவல்லி மலைத்தொடரில் மிக உயரமான சிகரம் குரு சிகார் 1722 மீட்டர்.
மேற்கு பகுதியில் உள்ள மத்திய உயர்நிலங்கள் மாவ பீடபூமி என்றும் அழைக்கப்படுகின்றன.
கிழக்கு தொடர் பகுதியை பண்டல்கண்ட் என்றும். இதன் தொடர்ச்சியை பாகல்கண்டு என்றும் அழைப்பர்.
சோட்டா நாகபுரி பீடபூமி மத்திய உயர்நிலைகளின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது இவ்விடமும் ஜார்கண்ட் மாநிலத்தின் பெரும்பகுதி மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது .
இப்பகுதி இரும்புத்தாது மற்றும் நிலக்கரி போன்ற கனிம வளத்திற்கு புகழ் பெற்றது.
தக்காண பீடபூமி
தக்காண பீடபூமி தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது.
வடமேற்கு திசையில் - விந்தியா சாத்புரா மலைத்தொடர்களையும்
வடக்கில் - மகாதேவ் மைக்காள குன்றுகளையும்
வடகிழக்கில் ராஜ் மஹால் குன்றுகளையும்
மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளையும்
கிழக்கில் கிழக்கு தொடர்ச்சி மலைகளையும் எல்லைகளாக கொண்டது .
சுமார் 7 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் உயரம் வரையும் அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகள்
இம்மலைகள் தீபகற்ப பீடபூவின் மேற்கு விளிம்பு பகுதியில் காணப்படுகின்றன .
இவை மேற்கு கடற்கரைக்கு இணையாக செல்கிறது.
இம்மலையின் வட பகுதி சையாத்ரி என்று அழைக்கப்படுகிறது.
இதன் உயரம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்ல செல்ல அதிகரிக்கிறது .
ஆனைமலை ,ஏலக்காய் மலை மற்றும் பழனி மலை ஆகியவை சந்திக்கும் பகுதியில் ஆனைமலை சிகரம் அமைந்துள்ளது.
மலை வாழிடமான கொடைக்கானல் பழனி மலையில் அமைந்துள்ளது.
கிழக்கு தொடர்ச்சி மலைகள்
கிழக்கு தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு பகுதியில் இருந்து வடகிழக்கு நோக்கி நீண்டு தீபகற்ப பீடபூமி கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன.
பூர்வாதிரி என்று அழைக்கப்படுகிறது.
கிழக்கு தொடர்ச்சி மலைகளும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் கர்நாடகா தமிழ்நாடு எல்லையில் உள்ள நீலகிரி மலையில் ஒன்றிணைகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைகளைப் போன்று கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியானவை அல்ல .
No comments:
Post a Comment