சமவெளிகள் NOTES - இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு
வட பெரும் சமவெளிகள்
வளமான சமவெளிகள் வடக்கு மலையின் தென்புறம் பரந்து காணப்படுகின்றன.
இந்து கங்கை பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணையாறுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளை கொண்ட உலகிலேயே வளமான சமவெளியாக இது உள்ளது.
இதன் நீளம் சுமார் 2400 கி.மீ.
பாபர் சமவெளி
இமயமலை ஆறுகளால் படியவைக்கப்பட்ட பெரும் மணல்கள் மற்றும் பலதரப்பட்ட படிவுகளால் ஆனது.
இப்படிவுகளில் நுண்துளைகள் அதிகமாக உள்ளதால் இதன் வழியாக ஓடும் சிற்றோடைகள் நீர் உள்வாங்கப்பட்டு மறைந்து விடுகின்றன.
இதன் அகலம் மேற்கில் அகன்றும் கிழக்கில் குறுகியும் 8 கி.மீ முதல் 15 கி.மீ வரை உள்ளது.
தராய் மண்டலம்
தராய்மண்டலம் அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும் காடுகள் வளர்வதற்கும் பல்வேறு விதமான வனவிலங்குகள் வாழ்வதற்கும் ஏற்றதாக உள்ளது.
இது சுமார் 15 கி.மீ முதல் 30 கி.மீ வரை அகலம் கொண்டது தராய் காடுகள் வேளாண்மை சாகுபடிக்காக அளிக்கப்பட்டு வருகின்றன.
பாங்கர் சமவெளி
பெரும் சமவெளியில் காணப்படும் பாங்கர் என்பது மேட்டுநில வண்டல் படிவுகளை கொண்ட நிலத் தோற்றம்.
இங்குள்ள படிவுகள் யாவும் பழைய வண்டல் மண்ணால் ஆனவை.
இம்மண்ணானது கருமை நிறத்துடன் வளமான இலைமக்குகளை கொண்டும் நல்ல வடிகால அமைப்பையும் கொண்டுள்ளதால்.
இது வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது.
காதர் சமவெளி
ஆறுகளால் கொண்டுவரப்பட்டு படிய வைக்கப்படும் புதிய வண்டல் மண் காதர் அல்லது பெட் நிலம் என்று அழைக்கப்படுகிறது.
டெல்டா
கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளால் முகத்துவாரத்தில் உருவாக்கப்பட்ட வளமான முக்கோண வடிவ நிலப்பகுதியை சுந்தரவனம் டெல்டா எனப்படுகிறது.
இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக வேகத்தில் உருவாகும் டெல்டா ஆகும் .
வண்டல் சமவெளியில் உயர்நிலப் பகுதியில் சார்ஸ் எனவும் சதுப்பு நிலப்பகுதி பில்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன.
இந்தியாவின் வட இந்திய பெரும் சமவெளியை காலநிலை மற்றும் நிலப்பரப்பின் பண்புகளைக் கொண்டு நான்கு வகைகளாக பிரிக்கலாம்.
ராஜஸ்தான் சமவெளி
ராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே அமைந்துள்ளது .
இச்சமவெளி மற்றும் மறைந்து போன சரஸ்வதி ஆறுகளின் படிவுகளால் உருவாகியுள்ளது .
உப்பு ஏரிகள் ராஜஸ்தான் சமவெளியில் காணப்படுகின்றன.
ஜெய்ப்பூருக்கு அருகில் உள்ள சாம்பார் ஏரி அல்லது புஷ்கர் ஏரி அவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும் .
பெரிய இந்தியா பாலைவனம் தார்பாலைவனம் என்றும் அழைக்கப்படுகிறது .
இது இந்திய துணை கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இயற்கை எல்லையாக அமைந்துள்ளது .
உலகின் 17 வது மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை கொண்டுள்ளது .
இந்த பாலைவனப் பகுதி மருஸ்தலி என்றும், அரைபாலைவனப் பகுதி பாங்கர் என்றும் இரு பகுதிகளாக அழைக்கப்படுகின்றன.
பஞ்சாப் ஹரியானா சமவெளி
பஞ்சாப் ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கை அமைந்துள்ளது மற்றும் ராவி ஆறுகளினால் ஏற்படும் படிவுகளால் உருவானது .
கங்கை ,யமுனை, சட்லெஜ் ஆற்றிடைச் சமவெளியாகவும் உள்ளது.
கங்கை சமவெளி
கங்கை சமவெளி மேற்கில் உள்ள யமுனை ஆற்றில் இருந்து கிழக்கில் உள்ள வங்காளதேசம் வரை பரவி உள்ளது.
கங்கையும் அதன் துணையாறுகளான காக்ரா, காண்டக்,கோசி, யமுனை ,சாம்பல் ,பெட்வா போன்றவைகளும் அதிக அளவில் வண்டல் படிவுகளை படிய வைத்து இந்தியாவின் மிகப்பெரிய சமவெளியை உருவாக்கி உள்ளன.
பிரம்மபுத்திரா சமவெளி
பிரம்மபுத்திர சமவெளியின் பெரும்பகுதி அசாமில் அமைந்துள்ளது சுமார் 56.275 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வண்டல் விசிறிகள் ஆகவும் தராய் எனப்படும் சதுப்புநில காடுகள் ஆகும் காணப்படுகின்றன.
No comments:
Post a Comment