Saturday, September 16, 2023

Constitution of India - Auditor General of Government of India

 இந்திய அரசியலமைப்பு  - இந்திய அரசு தலைமை தணிக்கையாளர்

tnpsc polity notes


இந்திய அரசு தலைமை தணிக்கையாளர் (CAG-controller and auditor general of India)Art 148-151


இந்திய தணிக்கை கணக்கு துறையின் தலைமை அலுவலராக உள்ளார்.


இவரை நியமிப்பவர் குடியரசுத் தலைவர்.


தகுதிகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.


பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை.


ஓய்வுக்குப் பின் மத்திய மாநில அரசு பணிகளுக்கு நியமிக்க கூடாது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கும் முறையில் குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்வார்.

பதவி விலகல் கடிகத்தை குடியரசு தலைவரிடம் அளிக்க வேண்டும்.

பதவி பிரமாணம் குடியரசுத் தலைவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபர்.

சம்பளம் மற்றும் அதிகாரங்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையானது.

 படிகளை நிர்ணயிப்பது பாராளுமன்றம்.

1971 இல் தலைமை தணிக்கையாளரின் கடமை அதிகாரம் பற்றிய சட்டம் இயற்றப்பட்டது.

சட்டம் 1976 இல் திருத்தப்பட்டது.

இவர் இந்திய தொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்களை கண்காணிப்பார்.

இவர் பாராளுமன்ற பொது கணக்கு குழுவின் கண்கள் மற்றும் காதுகள் போன்றவர் என அழைக்கப்படுகிறார்.

CAG அரசியலமைப்புச் சட்டப்படி மிக முக்கியத்துவம் வாய்ந்த அலுவலர் என்று டாக்டர் பி ஆர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

இவர் தனது ஆண்டறிக்கியை குடியரசுத் தலைவரிடம் அளிப்பார் குடியரசுத் தலைவர் ஆண்டு அறிக்கை பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார்.

சட்டப்பிரிவு 148  இந்தியாவிற்கு CAG   இருக்க வேண்டும் என குறிப்பிடுகிறது.

சட்டப்பிரிவு 149 CAG  யின் கடமைகள் அதிகாரங்கள் பொறுப்புகள் பற்றி குறிப்பிடுகிறது.

சட்டப்பிரிவு 150 CAG  மத்திய மாநில அரசுகளின் கணக்குகளை தணிக்கை செய்வது பற்றி குறிப்பிடுகிறது.

சட்டப்பிரிவு 151 CAG  தணிக்கை அறிக்கை பற்றி குறிப்பிடுகிறது.


No comments:

Post a Comment