டிஎன்பிஎஸ்சி நேர்காணலில் வரும் அதிரடி மாற்றம் -இனி தவறுகள் நடக்க வாய்ப்பே இல்ல ராஜா...
சென்னை: டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வில் குளறுபடிகள் நடக்க வாய்ப்புள்ளதாகச் சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறையைப் பின்பற்றவுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC நேர்முக தேர்வில் நடைபெறும் குளறுபடிகளை தடுக்கும் நோக்கில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
TNPSC
தமிழகத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படுவதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தகுதியான அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் வகையில் நேர்காணல் தேர்வுகளில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நேர்காணலில் கலந்து கொள்ள இருக்கும் தேர்வாளர்களின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி ஆகிய விவரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு ஏ, பி, சி, டி ஆகிய எழுத்துக்கள் மட்டுமே காண்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவரங்களுடன் மட்டுமே தேர்வாளர்கள் நேர்காணல் அறைக்குள் அனுமதிக்கப்படுபவர் எனவும், இதன் மூலமாக எந்தவித குளறுபடிகளும் நடைபெற வாய்ப்பு இல்லை எனவும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த நடைமுறை நேர்காணல் தேர்வுகளில் பின்பற்றப்படுவதால் விண்ணப்பதாரர் மீது சார்புத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், எந்தவித குளறுபடிகளும் நடைபெறாது எனவும், வெளிப்படை தன்மை அதிகரிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment