போட்டித் தேர்வுகளும் அதிகமான அரசுப் பணியும்
இவ்வாண்டில் அதிகமான அரசு வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் டி.என்.பி.எஸ்.சி பற்றியும், டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகள் என்னென்ன? அத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு தயாராக வேண்டும்? இந்த ஆண்டே அரசுப்பணியை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? போன்ற விவரங்களை இந்த இதழில் தெரிந்து கொள்வோம்.
கடந்த இதழில் போட்டித்தேர்வுகள் பற்றிய பொதுவான தகவல்களையும், போட்டித்தேர்வுகளில் புதிதாக ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் குறித்தும் படித்தீர்கள். இவ்வாண்டில் அதிகமான அரசு வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் டி.என்.பி.எஸ்.சி பற்றியும், டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகள் என்னென்ன? அத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு தயாராக வேண்டும்? இந்த ஆண்டே அரசுப்பணியை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? போன்ற விவரங்களை இந்த இதழில் தெரிந்து கொள்வோம்.
டி.என்.பி.எஸ்.சி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) என்பது தேர்தல் ஆணையத்தைப் (Election Commission) போல தனியான முழுச் சுதந்திரத்துடன் கூடிய ஒர் அமைப்பாகும். இதன் முக்கியப் பணியானது தமிழ்நாடு அரசுப்பணிகளில் குறிப்பாக மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பல்வேறு பதவிகளில் தோன்றும் காலிப்பனியிடங்களை நிரப்பும் பொருட்டு பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு படித்தவர்களிடம் அவரவர் கல்வித்தகுதிக்கேற்ப போட்டித் தேர்வுகளை நடத்தி அதன்மூலம் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து அரசுக்கு கொடுப்பtttthsதே ஆகும். இத்தேர்வு முறைகளில் மாநில அரசோ, அரசின் அங்கத்தினர்களோ தலையிட இயலாது.
தேர்விலே குழப்பமா?
கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஓரிரு லட்சமாகவே இருந்தது. தேர்வில் வெற்றி பெறுவதற்கு சந்தையில் கிடைத்த ஏதேனும் ஒரு வழிகாட்டி நூலே போதுமானதாகவும் இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை அவ்வாறு இல்லை. ஏனெனில், இன்றைக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு பற்றிய விழிப்புணர்வு பரவலாக்கப்பட்டுள்ளது. எந்தத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானாலும் சுமார் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் பேர் வரை விண்ணப்பம் செய்கின்றனர். போட்டியாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது ஆரோக்கியமான ஒன்றாகும்.
இது ஒருபுறமிருக்க, டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதும் மாணவர்களில் பலர், ஏதேனும் ஒரு பெரிய மனிதரின் சிபாரிசோ அல்லது பெருந்தொகையோ இருப்பவர்களால் மட்டும்தான் அரசு வேலையைப் அடைய முடியும் என்ற அவநம்பிக்கையோடு இத்தேர்வை அலட்சியம் செய்தும் வருகின்றனர். அவர்களின் இந்த குழப்பத்திற்கும் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த காலங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானது, தேர்வு முறையில் பொறுப்பற்ற அதிகாரிகளின் தலையீடு, கையூட்டு கொடுத்து வேலைக்குச் சென்றவர்களை கண்டுபிடித்து வெளிப்படையாகவே ஊடகங்களில் வெளியான செய்திகள் இவ்வாறு ”வொய் திஸ் கொலவெறி” திரைப்பாடல்போல டி.என்.பி.எஸ்.சியில் ஏற்பட்ட சர்ச்சைகளும் பிரபலமானதே இந்த மாணவர்களின் குழப்பத்திற்கு காரணமாகும்.
முடிவும் தெளிவும்
எந்தவொரு பிரச்சனைக்கும் நிச்சயம் ஒரு முடிவு உண்டு. அப்படித்தான் கடந்த ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி – ன் ஆணையராக நியமனமான திரு. நடராஜ் மற்றும் செயலகராக இருந்த திரு. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இந்த இருவரும் இணைந்து… வினாத்தாள் வெளியானதாக சந்தேகப்பட்ட தேர்வை ரத்து செய்து உடனே மறுதேர்வு, கையூட்டு செய்தவர்கள் கைது போன்ற அதிரடி நடவடிக்கைகளால் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் நடந்துவந்த முறைகேடுகளுக்கெல்லாம் ஒரு முடிவு வந்தது. மட்டுமன்று, ஆன்லைன் விண்ணப்பம், தரமான வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு முடிந்தவுடன் இணையதளத்தில் அதற்கான விடை என்று டி.என்.பி.எஸ்.சி ஒரு புதிய கட்டமைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது தகுதியான, திறமையான் நபர்களை மட்டுமே டி.என்.பி.எஸ்.சி தேர்வு செய்கிறது என்பதை மாணவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு வெற்றிக்கான வழிமுறைகளை அறிந்து நன்றாகப் படிப்பதே சாலச்சிறந்த செயலாகும்.
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகள் என்னென்ன?
Name of the Examination/ Services
1.GROUP – I SERVICES EXAMINATION (தொகுதி 1 தேர்வு) : துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், (வகை 1) வணிகவரி அலுவலர், கோட்ட வளர்ச்சி அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாளிணிப்பு அலுவலர், கோட்ட வளர்ச்சி அலுவலர், கோட்ட தீயணைப்பு அலுவலர் போன்ற பதவிகள். இதில் துணை ஆட்சியர், வணிகவரி அலுவலர், கோட்ட வளர்ச்சி அலுவலர், துணை பதிவாளர் போன்ற பதவிகளில் பதவி உயர்வு பெற்று பிற்காலத்தில் இ.ஆ.ப. அலுவலர்களாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதே போன்று காவல் கண்காணிப்பாளர் பதவியில் சேருவோர் இ.கா.ப. ((IPS) பணிக்கு உயர்வு பெற வாய்ப்புகள் உள்ளன. (நகராட்சி ஆணையாளர் பதவி – புதிதாக இணைக்கப் பட்டுள்ளது)
2.GROUP I-A SERVICE EXAMINATION (Tamil Nadu Forest Service) : உதவி வன பாதுகாவலர் பதவி
3.GROUP 1-B SERVICE EXAMINATION ( Assistant Commissioner, Hindu Religious & Charitable Endowments Administrative Service ) : உதவி ஆணையர், இந்து சமயம் மற்றும் அறநிலைய ஆட்சித்துறை
4.COMBINED SUBORDINATE SERVICES EXAMINATION – I ( ஒருங்கிணைந்த சார்நிலைப்பணி தொகுதி 1) : நன்னடத்தை அலுவலர், மகளிர் நல அலுவலர், உதவி வணிகவரி அலுவலர், கூட்டுறவுச் சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர். தொழிலாளர் உதவி ஆய்வாளர் போன்ற பல பதவிகளுக்கு விண்ணப்பித்து தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று பணியில் சேரலாம். சார்பதிவாளர் நிலை- II , உதவி பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை அல்லாது) உதவி பிரிவு அலுவலர் (சட்டத்துறை), உதவி பிரிவு அலுவலர் (நிதித்துறை), உதவியாளர் (சட்டத்துறை), உதவியாளர் (நிதித்துறை). தமிழ்நாடு அமைச்சுப் பணியில் அடங்கிய வருவாய் துறை உதவியாளர், போன்ற பதவிகளுக்கு பல்வேறு துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
5. COMBINED SUBORDINATE SERVICE EXAMINATION II ( ஒருங்கிணைந்த சார்நிலை பணி தொகுதி 2) : இளநிலை கூட்டுறவுச்சங்க ஆளிணிவாளர் (Junior Inspector of Co-operative Society), நிலைய தீயணைப்பு அலுவலர் (Station Fire Officer)
6.GROUP IV SERVICES EXAMINATION (தொகுதி IV) தமிழ்நாடு அமைச்சுப்பணியில் அடங்கிய தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற பல பதவிகள் மற்றும் தொகுதி-4 தேர்வு, நீதிமன்றம் சார்ந்த பணிகளுக்கு இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து- தட்டச்சர் தமிழ்நாடு நிதி அமைச்சுப் பணியில் அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
7.GROUP-V A SERVICE EXAMINATION ( தொகுதி V A தேர்வு) : தலைமை செயலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். (Assistant in Tamil Nadu Secretariat)
8.GROUP VI SERVICE EXAMINATION ( தொகுதி VI தேர்வு) : வனத் தொழில் பழகுநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
9.GROUP VII SERVICE EXAMINATION ( தொகுதி VI I தேர்வு ) : இந்து அறநிலையத்துறையில் ஏற்படும் செயல் அலுவலர் நிலை-1 மற்றும் செயல் அலுவலர் நிலை-3 போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். (Executive Officer Grade I and Grade III)
10.GROUP VIII SERVICE EXAMINATION (தொகுதி VIII தேர்வு ) : இந்து அறநிலையத்துறையில் ஏற்படும் செயல் அலுவலர் நிலை-4 போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். (Executive Officer, Grade IV)
(குறிப்பு: மேற்கண்ட பட்டியல் முதல் பத்து தேர்வுகளே. இன்னும் இது போன்று பல்வேறு தகுதி அடிப்படையில் 60 வகையான தேர்வுகள் டி.என்.பி.எஸ்.சியில் நடத்தப்படுகின்றன.)
தற்போதைய அறிவிப்புகள் எது எது?
பத்தாயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் அடங்கிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளிவர உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். பத்தாவது வகுப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பு உண்டு. பத்தாவது வகுப்புக்கு மேல் அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆன்லைனில் (www.tnpsc.gov.in, www.tnpscexams.net ) விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்புகளும் விரைவில் வெளிவரவுள்ளது. இவ்வாறு தொடர்ந்து அரசு வேலைக்கான வாய்ப்புகள் நம் கண்முன்னே கொட்டிக்கிடக்கிறது. அரசு வேலைக்குச்செல்ல விரும்பும் உள்ள ஒவ்வொருவரும் உங்களின் தகுதியை வளர்த்துக்கொண்டால் வேலையைத் தேடி நீங்கள் செல்ல வேண்டியதில்லை. மாறாக வேலை உங்களைத்தேடி வரும்.
தேர்வுக்குத் தயாராவது எப்படி?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளுக்கும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள சமச்சீர்க் கல்வி பாடப் புத்தகங்களே ஆதார நூல்களாகும். அதனோடு பொது அறிவு, நாட்டு நடப்பு, அறிவியல், விளையாட்டு, அரசியல், அரசாங்கம், பொருளாதாரம் போன்ற பல்துறை சார்ந்த பொது அறிவினையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். பொது அறிவை வளர்த்துக்கொள்ள இந்திய அரசின் வெளியீட்டுத்துறை வெளியிட்டுள்ள இந்தியா இயர் புத்தகமும் நடப்புச்செய்திகளை அறிந்து கொள்ள நாள்தோறும் செய்தித்தாளை வாசித்து குறிப்புகள் எடுத்துக்கொள்வதும் மிகவும் உதவியாக அமையும்.
நாம் பெறுகின்ற ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் போட்டியாளர்கள் அழுத்தமாக உணர்ந்து மேற்கண்ட பாட நூல்களை திரும்ப திரும்ப படித்து அதிலிருந்து பல்வேறு மாதிரித்தேர்வுகள் எழுதிப்பார்ப்பதன் மூலம் வெற்றியும் வேலையும் நிச்சயமாகும்.
No comments:
Post a Comment