இந்திய அரசியலமைப்பு (6TH+10TH+12TH) SCHEDULE 1 NOTES
ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும். அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (U.S.A.) தோன்றியது. 1946 ஆம் ஆண்டு, அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இச்சபையில் 292 மாகாணப் பிரதிநிதிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள், பலுச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் (1) மற்றும் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூவர் (3) என மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர். அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம்,1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் நடைபெற்றது. இச்சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பினர் டாக்டர். சச்சிதானந்த சின்கா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பை உருவாக்க கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் போதே அவர் இறந்ததைத் தொடர்ந்து, டாக்டர். இராஜேந்திர பிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும், H.C. முகர்ஜி மற்றும் V.T. கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணைத்தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதைத்தான் நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். 1929-ஆம் ஆண்டு லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை (PURNA SWARAJ) அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 1930, ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாகக்(Purna Swaraj Day) கொண்டாடப்பட்டது. பின்னாளில் அதுவே நமது குடியரசு தினமாக ஆனது. ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், மௌலானா ஆஸாத், எஸ். ராதாகிருஷ்ணன், விஜயலக்ஷ்மி பண்டிட்,சரோஜினி நாயுடு உட்படப் பலர் இந்த அமைப்பில் இடம்பெற்றிருந்தனர். 15 பெண் உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இடம்பெற்றிருந்தனர். ஏழு பேர் கொண்ட அரசமைப்புச் சட்டவரைவுக் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதற்கான ஆலோசகராக பி.என்.ராவ் நியமிக்கப்பட்டார். இக்குழுவின் முதல் கூட்டம் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. அன்றே அரசமைப்புச் சட்டத்தை எழுதும் வேலைகள் தொடங்கிவிட்டன. அண்ணல் அம்பேத்கர்'இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை' என அழைக்கப்படுகிறார். 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் கடந்த நிலையில், 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் முழுமையான அரசமைப்புச் சட்டம் தயாரானது. அரசமைப்புச் சட்டம் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் சுமார்இரண்டாயிரம் திருத்தங்கள் (amendments)அதில் மேற்கொள்ளப்பட்டன. அந்த நாளை அரசமைப்புச்சட்ட நாளாக ஆண்டுதோறும் நாம் கொண்டாடுகிறோம். 64 லட்சம் ரூபாய் அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை தான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது. அது இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, மக்களாட்சிக் குடியரசு என்று வரையறை செய்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகத் தேவையான உரிமைகளே அடிப்படைஉரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன. சம உரிமை, சுதந்திரமாகச் செயல்படும் உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சுதந்திர சமய உரிமை, கலாச்சார மற்றும் கல்வி பெறும் உரிமை, சட்டத்தீர்வு பெறும் உரிமை. பதினெட்டு வயது பூர்த்தியான இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் ஓட்டளிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள். அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் பி. ஆர். அம்பேத்கர்,என்.கோபாலசாமி. கே.எம். முன்ஷி,சையது முகம்மது சாதுல்லா, என். மாதவ ராவ், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஆகிய சட்ட வல்லுனர்கள்இடம்பெற்றிருந்தனர்.• அக்குழுவின் தலைவரான பி. ஆர். அம்பேத்கர் நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.• நமது அரசியல் சட்டம் உருவானபோது, 395 உறுப்புகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன.தற்போது 448 உறுப்புகள், 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன. 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இத்தாலிய பாணியில், அவரது கைப்படஎழுதப்பட்டது.• அரசமைப்புச் சட்டம் 16.9.2016-வரை 101 முறை திருத்தப்பட்டுள்ளது. இ ந் தி ய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்: உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது. இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை. இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது. இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது. சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது. முகவுரை: ‘முகவுரை’ (Preamble) என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கிறது.பெரும் மதிப்புடன் "அரசியலமைப்பின் திறவுகோல்" என குறிப்பிடப்படுகிறது.1947ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜவகர்லால் நேருவின் ’குறிக்கோள் தீர்மானத்தின்’ அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின்முகவுரை அமைந்துள்ளது. முகவுரையானது 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி திருத்தப்பட்டது. அதன்படி,சமதர்மம், சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு போன்றமூன்று புதிய சொற்கள் சேர்க்கப்பட்டன. 1789ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.குடியுரிமை ’சிட்டிசன்’ (Citizen) எனும் சொல் ’சிவிஸ்’(Civis) எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் ஒரு ’நகர அரசில் வசிப்பவர்’ என்பதாகும். இந்திய அரசியலமைப்பின் பகுதி II சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.குடியுரிமைச் சட்டம் (1955) இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு, 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டம், குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது. இச்சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது.அடிப்படை உரிமை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III) 12ல் இருந்து 35 வரையுள்ளசட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன.முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை வழங்கியது. ஆனால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன. இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ’இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது.அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை (சட்டப்பிரிவு - 32): நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும். இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன. இது போன்ற ஆணைகளைவெளியிட்டு மக்களின் உரிமைகளைக் காப்பதினால் உச்சநீதிமன்றம் ‘அரசியலமைப்பின் பாதுகாவலன்’ என அழைக்கப்படுகிறது. டாக்டர். B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32, இந்திய அரசியலமைப்பின் ’இதயம் மற்றும் ஆன்மா’ ஆகும்.அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas Corpus)சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus)மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்இ) தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition)ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.ஈ) ஆவணக் கேட்பு பேராணை (Certiorari)உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.உ) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo-Warranto)இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.
I. சமத்துவ உரிமைபிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்.பிரிவு 15- மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்தல்.பிரிவு 16 - பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.பிரிவு 17 - தீண்டாமையை ஒழித்தல்.பிரிவு 18 - இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்.II. சுதந்திர உரிமைபிரிவு 19 - பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை.பிரிவு 20 - குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.பிரிவு 21 - வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை.பிரிவு 21 A - தொடக்கக்கல்வி பெறும் உரிமை.பிரிவு 22 - சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.III. சுரண்டலுக்கெதிரான உரிமைபிரிவு 23 - கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.பிரிவு 24 - தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.IV. சமயச்சார்பு உரிமைபிரிவு 25 - எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும்,பரப்பவும் உரிமை.பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.பிரிவு 27 - எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.பிரிவு 28 - மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமலிருக்க உரிமைV. கல்வி, கலாச்சார உரிமைபிரிவு 29 - சிறுபான்மையினரின் எழுத்து, மொழி,மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.பிரிவு 30 - சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.VI. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமைபிரிவு 32 - தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல். 1978ஆம் ஆண்டு, 44ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி XII, பிரிவு 300 A வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது.அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல்: இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத்தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது. மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத்தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம்.அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்: அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு 36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது.அதாவது சமதர்ம, காந்தியமற்றும் தாராள-அறிவுசார்ந்தவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கைகளை, நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாகச் செயற்படுத்த முடியாது.இந்திய அரசியலமைப்பின் ‘புதுமையான சிறப்பம்சம்’ என டாக்டர். B.R. அம்பேத்கர் இதனை விவரிக்கிறார்.இவை அயர்லாந்து நாட்டின்அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை . 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, 86வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 45 திருத்தப்பட்டு, பிரிவு 21A வின் கீழ் தொடக்கக்கல்வி, அடிப்படை உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம், மாநில அரசுகள் முன்பருவ மழலையர் கல்வியை (Early Childhood Care and Education - ECCE) 6 வயது வரையுள்ள குழந்தை களுக்கு வழங்க அறிவுறுத்துகிறது.அடிப்படைக் கடமைகள்: இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் என்பவை முன்னாள் சோவியத் யூனியன் (USSR) அரசியலமைப்பின்தாக்கத்தால் சேர்க்கப்பட்டகும். 1976ஆம் ஆண்டு, அமைக்கப்பட்ட சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி அரசியலமைப்புச் சட்ட திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. அதன்படி 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியல் அமைப்புச் சட்டதிருத்தம் நமது அரசியலமைப்பில் குடிமக்களின் பொறுப்புகள் சிலவற்றைச் சேர்த்தது. இந்தச் சட்டத்திருத்தம், அரசியலமைப்பின் பகுதி IV A என்ற ஒரு புதிய பகுதியைச் சேர்த்தது. இந்தப் புதிய பகுதி 51 A என்ற ஒரேயொரு பிரிவை மட்டும் கொண்டது. இது குடிமக்களின் பத்து அடிப்படைக் கடமைகளை விளக்கும் குறிப்பிட்ட சட்டத் தொகுப்பாக உள்ளது.அடிப்படைக் கடமைகளின் பட்டியல்அ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அரசியலமைப்பு,அதன் கொள்கைகள், நிறுவனங்கள்,தேசியகீதம்,தேசியக்கொடி, தேசிய சின்னங்கள் ஆகியவற்றை மதித்தல்.ஆ) சுதந்திர போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்த உயரிய நோக்கங்களைப் போற்றி வளர்த்தல்.இ) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றைப் பேணிப் பாதுகாத்தல்.ஈ) தேசப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் பொழுது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்.உ) சமய, மொழி மற்றும் பிராந்திய அல்லது பகுதி சார்ந்த வேறுபாடுகளை மறந்து, பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் பழக்கத்தை நிராகரித்து, பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் எண்ணங்களை மேம்படுத்தி, இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதரத்துவத்தை வளர்த்தல்.ஊ) நமது உயர்ந்த, பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்து பாதுகாத்தல்.எ) காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் மற்றும் உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்தி அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல்.ஏ) அறிவியல் கோட்பாடு, மனிதநேயம், ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல்.ஐ) வன்முறையைக் கைவிட்டு பொது சொத்துக்களைப் பாதுகாத்தல்.ஒ) தனிப்பட்ட மற்றும் கூட்டுசெயல்பாடுகள் என அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்தவற்றை நோக்கி செயல்பட்டு, தேசத்தின் நிலையான, உயர்ந்த முயற்சி மற்றும் சாதனைக்காக உழைத்தல்.ஓ) 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல். (86வது அரசியலமைப் பு திருத்தச்சட்டம் 2002இன் படி 51A (k) கீழ் 11வது அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் அனைத்து இந்திய குடிமக்கள் அல்லது பெற்றோர்கள் 6 முதல் 14 வயதுள்ள தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் கல்விபெறும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்).இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை,மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வினைப் பற்றி கூறுகிறது. அவை மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப்பட்டியல் என மூன்று பட்டியல்கள் முறையே 97, 66, 47 என்று அதிகாரத்தை வழங்கியுள்ளது.தற்போது அதிகாரப் பகிர்வு என்பது மத்திய அரசு பட்டியலில் 100 துறைகள், மாநில அரசு பட்டியலில் 61 துறைகள், மற்றும் இரண்டுக்கும் பொதுவான பொதுப்பட்டியலில் 52 துறைகள் என்றும் மாற்றப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து 5 துறைகளை, பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. அவை, கல்வி, காடுகள், எடைகள் மற்றும் அளவுகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு, மற்றும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற அமைப்புகளைத் தவிர பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம் ஆகியனவாகும். நிதி உறவுகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி XII சட்டப்பிரிவு 268ல் இருந்து 293 வரைஉள்ள பிரிவுகள் மத்திய-மாநில அரசுகளின் நிதிசார்ந்த உறவுகளைப் பற்றி விளக்குகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 280ன் கீழ் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,மத்திய அரசால் சில வரிகள் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு, மத்திய அரசாலும், மாநில அரசாலும்பிரித்துக்கொள்ளப்படுகின்றன. அலுவலக மொழிகள் அரசியலமைப்பு சட்டப் பகுதி XVIIஇல் 343 லிருந்து 351 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன.தொடக்கத்தில் 14 மொழிகள் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. தற்போது 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு இந்திய அரசு “செம்மொழிகள்” எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்தது. அதன்படி 6 மொழிகள் செம்மொழி தகுதியை பெற்றுள்ளன. அவை, தமிழ்(2004), சமஸ்கிருதம் (2005), தெலுங்கு(2008), கன்னடம்(2008), மலையாளம் (2013) மற்றும் ஒடியா(2014).அவசரகால ஏற்பாடுகள்: தேசிய அவசரநிலை (சட்டப்பிரிவு 352)போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத்தலைவர்,அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன்கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம். போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுதுஅது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது. ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது அது 'உள்நாட்டு அவசர நிலை' எனப்படுகிறது. இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன. மாநில அவசரநிலை (சட்டப்பிரிவு 356) ஒரு மாநிலத்தில், மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும்பொழுது அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது, குடியரசுத்தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ன் கீழ் அவசரநிலையைஅறிவிக்கலாம். இந்த அவசரநிலை, சட்டப் பிரிவு 352ன் படி நடைமுறையில் இருந்தாலும் அல்லது தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்று சான்றளித்தாலும் மட்டுமே ஓராண்டைத் தாண்டியும் தொடரமுடியும். அதிகபட்சம் அவசரநிலையின் காலம் 3 ஆண்டுகள் இருக்கமுடியும். மாநிலமானது, குடியரசுத்தலைவர் சார்பாக ஆளுநரால் ஆளப்படுகிறது. இந்தியாவில் முதன்முறையாக 1951இல் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.நிதி சார்ந்த அவசரநிலை (சட்டப்பிரிவு 360) நிதிநிலைத் தன்மை, இந்தியாவின் கடன் தன்மை மற்றும் இந்தியாவின் பகுதிகள் ஆபத்தில் இருந்தால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 360ன் கீழ் குடியரசுத்தலைவர் நிதிசார்ந்த அவசரநிலையைப் பிறப்பிக்கலாம். இந்த வகையான அவசரநிலையில் மத்திய-மாநில அரசு ஊழியர் எந்த வகுப்பினராயினும் அவர்களது ஊதியம், படிகள் மற்றும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைவரது ஊதியமும் குடியரசுத்தலைவரின் ஓர் ஆணையின் மூலம் குறைக்கப்படும். இந்த வகையான அவசரநிலைஇந்தியாவில் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் : ’அமெண்ட்மெண்ட்’ (Amendment) எனும் சொல் மாற்றம், மேம்படுத்துதல், மற்றும் சிறு மாறுதல் என்பதைக் குறிக்கிறது. அரசியலமைப்பின் சட்டம் பகுதி XXல் 368வது சட்டப்பிரிவு, அரசியலமைப்பினை சட்ட திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி தெரிவிக்கிறது. அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வகைகள் அரசியலமைப்பின் 368வது சட்டப்பிரிவு மூன்று வகைகளில் அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களைச் செய்ய வழிவகுக்கிறது.1. நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.2. நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.3. நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலைப் பெறுவதன் மூலம் திருத்தப்படுதல். அரசியலமைப்பின் 42வது சட்டத்திருத்தம் 'குறு அரசியலமைப்பு' என அறியப்படுகிறது. அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுக்கள்: அரசியலமைப்பு செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய 2000ஆம் ஆண்டில் இந்திய அரசு ஒரு தீர்மானத்தின் படி திரு M.N. வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் ஒன்றை அமைத்தது. அரசின் பல்வேறு நிலைகள், அவற்றிற்கிடையேயான தொடர்பு மற்றும் பங்களிப்புகள் குறித்துப் புதிய நோக்கத்தோடு ஆராய ஏப்ரல் 2007ஆம் ஆண்டு மூன்று உறுப்பினர்களைக் கொண்ட M.M. பூஞ்சி தலைமையில் அப்போதைய அரசு ஓர் ஆணையத்தை அமைத்தது. இந்திய அரசமைப்பின் நான்காவது பாகம் இந்திய சமூகத்தில் பரவலாக நிலவும் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் சட்டங்களை அரசு உருவாக்கும் வகையில் விதிகளைக் கொண்டுள்ளது. மதச்சார்பின்மை கோட்பாட்டினை பின்பற்றாத அரசு மதச்சார்பு அரசு எனப்படும்.மதச்சார்பு அரசு உதாரணங்கள் - பாகிஸ்தான், வாடிகன் நகரம் போன்றவை ஆகும். இந்திய அரசமைப்பின் 42வது திருத்தச்சட்டம், அரசமைப்பின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள ‘இறையாண்மை கொண்ட குடியரசு’ என்பதை ‘இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு’ என்றும் ‘நாட்டின் ஒற்றுமை’ என்ற சொற்றொடரை ‘நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு’ என்றும் முந்நாள் பிரதமர் இந்திரா காந்தி 1976இல் தேசிய அவசரநிலைக் காலத்தில் இந்த 42-வது திருத்தத்தைக் கொண்டு வந்தார். இந்திய அரசமைப்பு அதிகாரங்களை சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை போன்ற நிறுவனங்கள் இடையே கிடைமட்டமாக பகிர்ந்து வழங்குகிறது. இந்திய அரசமைப்பு அதிக இறுக்கமான தன்மையைக் கொண்டதில்லை; அதிக நெகிழ்வுத் தன்மையும் கொண்டதில்லை; 284 உறுப்பினர்கள் 26.11.1949 அன்று அரசமைப்பினை ஏற்று கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர். அரசமைப்பு நிர்ணயசபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 அன்று 11 மணி அளவில் புதுதில்லி, அரசமைப்பு அரங்கில் கூடியது. அன்றைய கூட்டத்தின் முதல் கூட்டப்பொருள்: ‘‘தற்காலிகத்தலைவர் தேர்வு’‘ ஆகும். ஆச்சார்ய ஜே. பி. கிருபாளினி அவர்கள் டாக்டர் சச்சிதானந்த சின்ஹாவை தற்காலிகத் தலைவராகத் தலைமையேற்று நடத்தும்படி கேட்டுக்கொண்டார். அரசமைப்புற்கு ஒப்புதல் தருவதற்காக கூட்டத்திற்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். சபை 24.01.1950 அன்று கூடிய9 டிசம்பர் 1946 முதல் 24 ஜனவரி, 1950 வரை அரசமைப்பு நிர்ணயச்சபையின் விவாதங்களின் தொகுப்பு 12 தொகுதிகளைக் கொண்டதாகும்.இந்திய அரசாங்கச் சட்டம், 1935 கூட்டாட்சி விதிகள், ஆளுநர் பதவி, நீதித்துறை, பொதுத் தேர்வாணையங்கள், நெருக்கடிகால விதிகள், நிர்வாக விவரங்கள் ஆகியன இந்திய அரசாங்கச் சட்டம், 1935-லிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ன. அவை பின்வருமாறு:நாடு அரசமைப்பின் மூல ஆதாரங்கள்1.பிரிட்டன் - நாடாளுமன்ற அரசு, ஒற்றைக் குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற செயல்முறைகள். இடைக்கால தடையாணைகள்2.அமெரிக்க அரசமைப்பு - அடிப்படை உரிமைகள், நீதி சீராய்வு, குடியரசுத்தலைவர் மீதான பதவிநீக்க தீர்மானம், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் துணைத்தலைவர் போன்றோரை பதவி நீக்கம் செய்யும் முறை3.அயர்லாந்து - அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்4.கனடா- ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டா ட்சி, மத்திய அரசிடம் பொதுப் பட்டியல், மத்திய அரசால் மாநில ஆளுநர் நியமனம், உச்சநீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு.5.ஆஸ்திரேலியா - வணிகம், வர்த்தக சுதந்திரம், நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்6.ஜெர்மனி வெய்மர் - அரசமைப்பு நெருக்கடிநிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு7.சோவியத் யூனியன் - அடிப்படைக் கடமைகள், முகப்புரையில் (சமூக, பொருளாதார,அரசியல்) நீதியின் மாண்புகள், அடிப்படைக் கடமைகள். (42வது திருத்தத்தில் உறுதிபடுத்தப்பட்டது.)8.பிரான்சு - குடியரசு, முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்9.தென் ஆப்பிரிக்கா - அரசமைப்புத் திருத்தமுறை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு. இந்திய அரசமைப்புதான் உலகிலேயே நீளமான எழுதப்பட்ட அரசமைப்பாகக் கருதப்படுகிறது. இந்திய அரசமைப்பில் சமதர்மம் என்ற சொல் 42-வது திருத்தச்சட்டம்மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட அரசு என்றால் தனது உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களை எந்தவிதமான வெளி நாட்டின் தலையீடு இன்றி நிர்வகிப்பதாகும். இந்திய அரசமைப்பு ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது. ஒன்றிய அரசு வழங்கும் குடியுரிமையே அனைத்து மாநிலங்களுக்குமானது.2015, பிப்ரவரி 27 அன்று மக்களவையில் குடியுரிமை சட்டம் 1955-ல் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் நீதி துறையின் செயல்பாடுகளில் நிர்வாகத் தலையீடோ அல்லது நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தலையீடோ இல்லாமல் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். ஒருங்கிணைந்த இந்திய நீதி அமைப்பில் உச்ச நீதிமன்றத்தின்கீழ் உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள் இயங்குகின்றன.இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால் நிலைநாட்டப்படுபவை ஆகும். ஒரு நபர் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கருதுவாரானால் நீதிமன்றத்தினை நாடி நிவாரணம் அடைய முடியும். இதனையொட்டி நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தினை நாடும் உரிமை உறுப்பு 32-இல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறார் இலவச கட்டாயக் கல்வி சட்டம், 2009, அரசமைப்பு உறுப்பு 21-அ கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றும் வண்ணம் இயற்றப்பட்டது. அரசின் வழிகாட்டுநெறிகள் அரசாட்சி தொடர்பாக அரசு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிகள் இந்திய அரசமைப்பின் நான்காவது பகுதியில் இடம் பெற்றுள்ளன. இந்திய அரசமைப்பின் தனித்தன்மை வாய்ந்த கூறுகளில் ஒன்று அரசு கொள்கை வழிகாட்டு நெறிகள் என்ற பகுதி ஆகும்.இந்திய அரசமைப்பின் பாகம் IV-ன் கீழ் முதுமை, வேலையின்மை, நோய்வாய்படுதல், வாழ்வாதாரத்திற்குத் தேவையான திட்டங்கள், பொருளாதா ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு சிறப்பு முன்னுரிமை, வளங்கள் பகிர்வில் உள்ள பாகுபாடுகள் ப�ோன்றவற்றிற்கு அரசு உதவிகள் வழங்குவதற்கான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. இந்தியா சிதைக்க முடியாத ஒன்றியமும் (மத்திய அரசும்) சிதைக்கத்தக்க மாநிலங்களும் கொண்ட ஆட்சி முறையாகும்.வடிவத்தில் கூட்டாட்சி அமைப்பைக் கொண்டிருந்தாலும் இந்திய அரசமைப்பு ஒற்றையாட்சி முறை, கூட்டாட்சி முறை இரண்டையும், நேரம், சூழல் ப�ோன்ற தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளத் தக்க ஆட்சிமுறையைக் கொண்டுள்ளது. உறுப்பு 79இன் கீழ் இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் குடியரசுத்தலைவர் மற்றும் ஈரவைகளைக் கொண்டது ஆகும். ஈரவைகள் மாநிலங்களவை, மக்களவை என்று அறிவோம். ஒரு கூட்டாட்சியில் நாடாளுமன்றம் ஈரவை கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் இதனை ஏற்கப்படுகிறது; மேலவை என்று அழைக்கப்படும் மாநிலங்களவை மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் கீழவை என்று அழைக்கப்படும் மக்களவை மக்கள் பிரதிநிதித்துவமும் கொண்டவை யாகும்.நாடாளுமன்றம் : குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தின் ஈரவைகளின்உறுப்பினர்கள் மற்றும் மாநில / ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதி சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் ஆகியோரை வாக்காளர்களா கக் கொண்டு குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த வாக்காளர் பட்டியல்படி தேர்தல் நடத்தப்பட்டு குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 238 உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதி சட்டமன்றங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதைத்தவிர 12 உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமனம் செய்வார். நிரந்தரமான அமைப்பு கலைக்கப்பட முடியாது. மாநிலங்களவை உறுப்பினர்களின் காலம் ஆறு ஆண்டுகள். மொத்த மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்று ஒரு பங்கு உறுப்பினர்களை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கும் வகையில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. மொத்த உறுப்பினர்கள் 545. 543 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். இரண்டு உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் ஆங்கிலோ- இந்திய சமுதாயத்தினர். மக்களவையின் காலம் ஐந்து ஆண்டுகள்.குடியரசுத்தலைவர் மக்களவையைக் கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார். இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் உருவான மதராஸ் மாகாண முதல் சட்டமன்றத்தில் (1952-1957). இராஜாஜி அரசு கொண்டுவந்த அடிப்படைக் கல்வி திட்டம் விமர்சிக்கப்பட்டது.பின்னர் முதல்அமைச்சராகப் பதவி ஏற்ற காமராஜர் அமைச்சரவையில் 1954 அரசின் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் இத்திட்டம்ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அதேசமயம், இராஜாஜி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்கும் நிலச் சட்டங்கள் தொடரப்பட்டன. சென்னை மாகாண தலைவர் சி.இராஜாஜி தனது முதல் நிதி நிலை அறிக்கையை 1937இல் மதராஸ் சட்டமன்றம், செனட் அவை, மதராஸ் பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் தாக்கல் செய்தார். 1967இல் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது. சி.என்.அண்ணாதுரை முதல்வராக பதவி ஏற்றார். அவரது ஆட்சியில் இந்து திருமணச் சட்டம் திருத்தப்பட்டு‘சுயமரியாதை திருமணங்கள்’ அதாவது மத சடங்குகள் இல்லாமல் மேற்கொள்ளப்படும் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டன. ஐந்து தடவைகள் முதல் அமைச்சராக பதவி வகித்த மு.கருணாநிதி பல சட்டங்களையும் எண்ணற்ற தீர்மானங்களையும் கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்த கடைசி சட்டமுன்வரைவு பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்குள் முஸ்லீம்களுக்கும் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்குவதுடன் பட்டியல் இனங்களுக்கும் மற்றும் பழங்குடியினருக்குமான ஒதுக்கீட்டின் கீழ் அருந்தியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குகிறது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையிலான பத்து ஆண்டுக்கால ஆட்சியில் (1977-1987) வருவாய் நிர்வாக துறையில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக, வாரிசு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான "கர்ணம்" பதவிக்கு முடிவு கட்டினார். மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தினார். 1992 நவம்பரில் உச்ச நீதிமன்றம் மண்டல் ஆணையம் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தில், பிற்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டினை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் கூட்டப்பட்டு 69 சதவீதம் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. 189 உறுப்பினர்கள் பொது தொகுதிகளிலிருந்தும் 45 உறுப்பினர்கள் தனித்த தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சட்டமன்றத்தில் முதல் கூட்டத் தொடர் முதல் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து (1952). 3.5.1952 அன்று தொடங்கியது. அரசமைப்பு உறுப்பு 333இன் கீழ் ஆங்கிலோ- இந்திய பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். 06.04.2021 அன்று தமிழக சட்டமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடந்ததையொட்டி 16-வது தமிழக சட்டமன்றம் 07.05.2021 அன்று அமைக்கப்பட்டது. அரசமைப்புத் திருத்தச்சட்டமுன்வரைவுஅரசமைப்பில் உள்ள ஒரு விதியில் திருத்தம் கோரும் சட்ட முன்வரைவுகள் அரசமைப்புத் திருத்தச்சட்டம் முன்வரைவு என்று அழைக்கப்படுகிறது. உறுப்பு 368 (2) ன் கீழ் வரும் அனைத்து விதிகளும் இதில் அடங்கும். இந்த சட்ட முன்வரைவினை நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் கொண்டு வரலாம். உறுப்பு 370 அரசமைப்பு உறுப்பு 370 என்பது ஜம்மு - காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு தன்னாட்சி தகுதி வழங்குவது ஆகும். இந்திய அரசு 5 ஆகஸ்டு 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியை ரத்துசெய்தது. சங்கரலிங்கனார் காந்திய வாதியும் இந்திய விடுதலைக்காக போராடிய தமிழ் வீரரும் ஆவார். 1895இல் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி வள்ளியம்மாளுக்கு மகனாக பிறந்தார். 1917இல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். மதராஸ் மாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களைப் பிரித்து, சென்னையை தலைநகராக கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமலு 1952 இல் உண்ணாவிரதப் ப�ோராட்டம் நடத்தினார்.இதைத் தொடர்ந்து பெயர் மாற்றும் பிரச்சனை எழுந்தது. இதைத் தொடர்ந்து 1956இல் மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கினார். பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 ஜுலை 27 அன்று விருதுநகரில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங் கினார். இந்தஉண்ணாவிரதப் போராட்டம் 75 நாட்களைக் கடந்தது சங்கரலிங்கனார் உடல் நலிவுற்றதால் உண்ணாவிரதப் போராட்டத் கைவிடும் படி சி.என். அண்ணாதுரை, ம.பொ.சிவஞானம், ஜீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தும் அவர் ஏற்கவில்லை. 1956 அக்டோபர் 13 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தின் 76ஆம் நாள் சங்கரலிங்கனார் உயிர் நீத்தார்.முக்கிய கூட்டு கூட்டங்கள்வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1959-6 மற்றும் 9 மே 1961 பயங்கரவாத தடுப்புச் சட்டம்-2002 மார்ச்மதராஸ் மாகாணத்தை தமிழகம் என பெயர் மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 27.07.1956 முதல் 13.10.1956 வரை 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். மதராஸ் மாநில பெயர்மாற்றச் சட்டம் 14 ஜனவரி 1969 ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. காந்திய வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தவர். தேர்வுக்குழு முறை வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற மக்களாட்சி முறையிலிருந்து பிறந்தது ஆகும். மாநிலங்களவை விதிகள் மற்றும் நடைமுறையின் உறுப்பு 125இன் கீழ் எந்தவொரு குறிப்பிட்ட சட்ட முன்வரைவையும் தேர்வுக்குழுவுக்கு அனுப்பும்படி எந்த ஒரு உறுப்பினரும் தீர்மானம் கொண்டு வர முடியும். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்த சட்ட முன்வரைவு தேர்வு குழுவின் பரிசீலினைக்கு அனுப்பப்படும். ஒரு சட்ட முன்வரைவு ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டு மற்றொரு அவையால் நிராகரிக்கப்படும் போதும் அல்லது ஏதேனும் ஒரு ஆட்சேபனை எழுப்பப்படும் போது அல்லது ஆறு வாரத்திற்கும் அதிகமாக இழுபறி நிலை நீடிக்கும் போதும் குடியரசுத்தலைவர் ஈரவைகளின் கூட்டுக் கூட்டத்தை கூட்டித் தீர்வு காணலாம். அந்த முன்வரைவு அமர்ந்துள்ள ஈரவைகளின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றால் அந்த முன்வரைவு நிறைவேற்றப்படும். ஆனால் பண முன்வரைவு அல்லது அரசியல் அரசமைப்புத்திருத்தச்சட்டம் ஆகியவற்றின் போது இது போன்று கூட்டு கூட்டத்தினை கூட்டி சட்டமாக்க இந்திய அரசமைப்பு அனுமதிக்கவில்லை.
No comments:
Post a Comment