ராணிப்பேட்டையிலேயே அரசு வேலை மாதம் ரூ.56,100 டூ ரூ. 2.05 லட்சம் வரை சம்பளம்.. - TNPSC
ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.56,100, அதிகபட்சமாக ரூ.2.05 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி சார்பில் தற்போது முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு மொத்தம் 13 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தோராயமான அறிவிப்பு தான். பணியிடங்கள் வரும்காலத்தில் அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரப்பினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோருக்கு வயது வரம்பு என்பது நிர்ணயம் செய்யப்படவில்லை. இவர்கள் எந்த வயதாக இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரை வயது தளர்வு வழங்கப்படும். முன்னாள் படை வீரர்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதசம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.56,100 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 700 வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்.வி.எஸ்சி படிப்பில் மைக்ரோ பயோலஜி, பாதோலாஜி, பராராசிடோலாஜி, டைரி மைக்ரோ பயோலாஜி, அனிமல் பயோடெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு வெட்னரி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப பதிவுக்கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற கைம்பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இஸ்லாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 முறையும், முன்னாள் ராணுவத்தினர் 2 முறை கட்டணம் செலுத்த தேவையில்லை எனும் முறையை பயன்படுத்தி கொள்ளலாம். இணையவழி விண்ணப்பத்தை 24.10.2013 நள்ளிரவு 12.01 மணி முதல் 26.10.2023 இரவு 11.59 மணிக்குள் திருத்தம் செய்யலாம். விண்ணப்ப தேதி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 19 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு டிசம்பர் மாதம் 9 ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும், அன்றைய தினம் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் 2ம் தாள் தேர்வும் கணினி வழித்தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் சான்று சரிபார்ப்பு மூலம் பணியில் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
No comments:
Post a Comment