50000 அரசு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப முதல்வர் உத்தரவு.. அடிச்சது பாருங்க ஜாக்பாட்..
தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி
தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் TNPSC தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்ததால் கலைப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனை உடனே நிரப்பவேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் TNPSC மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில் 50000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment