இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு பகுதி 1 SCHEDULE 1 NOTES
இந்தியா பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் ஆசிய கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகவும் உள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பு 32 லட்சத்து 87 ஆயிரத்து 263 சதுர கிலோமீட்டர் ஆகும். புவியின் மொத்த பரப்பளவில் 2.4 சதவீதம் ஆகும்.
இந்தியாவின் நிலம் மற்றும் நீர் எல்லைகள்
இந்தியா 15,200 கிலோமீட்டர் நில எல்லைகளைக் கொண்டுள்ளது.
வட மேற்கில் -பாகிஸ்தான் ஆப்கானஸ்தான்.
வடக்கில் - சீனா நேபாளம் பூடான்.
கிழக்கில் - வங்காளதேசம் மற்றும் மியான்மர்.
அதிகபட்ச எல்லை வங்காளதேசம் 4156 கிலோமீட்டர்.
குறைந்தபட்ச எல்லை ஆப்கானிஸ்தான் 106 கிலோமீட்டர்.
இந்தியாவின்
தெற்கு - இந்திய பெருங்கடல்
கிழக்கு - வங்காள விரிகுடா
மேற்கு - அரபிக்கடல் சூழப்பட்டு 6100 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதியை கொண்டுள்ளது.
இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து 7516.6 கிலோமீட்டர்.
இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பகுதி பாக் நீர் சந்தி.
அமைவிடமும் பரப்பளவும்
இந்தியா 8°4' வட அட்சம் முதல் 37°6' வட அச்சம் வரையிலும்.
68°7' கிழக்கு தீர்க்கம் முதல் 97°25 கிழக்கு தீர்க்கம் வரையிலும்.
இந்தியா முழுமையும் வடகிழக்கு அரைக்கோளத்தில் உள்ளது.
இந்தியாவின் தென்கோடி பகுதியான முன்பு பிக் மில்லியன் என்று அழைக்கப்பட்ட இந்திரா முனை.
இந்திய நிலப்பகுதியில் தென்கோடி குமரிமுனை ஆகும்.
வடமுனை இந்திரகோல் எனவும் அழைக்கப்படுகிறது.
வடக்கே லடாக் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை 3214 கிலோ மீட்டர் நீளத்தையும்.
மேற்கே குஜராத்தில் உள்ள ராணுவ கட்சி முதல் கிழக்கே அருணாச்சலப் பிரதேசம் வரை 2993 கிலோ மீட்டர் நீளத்தையும் கொண்டுள்ளது.
23°30' உச்சமான கடக ரேகை இந்தியாவின் மையமாக அமைந்து தென்பகுதி வெப்பமண்டலாகவும் வடபகுதி மிதவெப்ப மண்டலாகவும் பிரிக்கிறது.
இந்திய திட்ட நேரம்
மேற்கில் உள்ள குஜராத் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் வரை முப்பது தீர்க்க கோடுகள் உள்ளன.
இந்தியாவின் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கில் உள்ள குஜராத்தை காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயம் ஆகிறது இந்த நேர வேறுபாட்டை தவிர்ப்பதற்காக இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகையான கிழக்கு தீர்க்க ரேகையின் தலைநகரம் இந்திய திட்ட நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தீர்க்க ரேகை மிசாப்பூர் வழியாக செல்கிறது.
திட்ட நேரம் ஆனது கிரீன்விச் திட்ட நேரத்தை விட 5:30 முன்னதாக உள்ளது.
No comments:
Post a Comment