எட்டாம் வகுப்பு இயல் 5 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 5 || TNPSC EXAMS
1. 36 வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல் சிலப்பதிகாரம்.
2. மாக்கண் முரசம் என்று குறிப்பிடும் நூல் மதுரைக்காஞ்சி.
3. மண்ணம்மை முழுவு என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல் பொருநராற்றுப்படை.
4. ஒரே முகத்தை உடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு.
5. காலத்தை அறிவிக்க நாழிகை முழுவு,காலை முழவு பயன்படுத்தப்பட்டன.
6. கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் புறநானூறு.
7. மிகப் பழமையான யாழ் பெரியாழ், செங்கோட்டியாழ்.
8. பெரியாழ் என்பது 21 நரம்புகளைக் கொண்டது.
9. மீன் வடிவில் அமைந்த மகரயாழ் 19 நரம்புகளைக் கொண்டது.
10. சகோடயாழ் 14 நரம்புகளைக் கொண்டது.
11. யாழ் போன்ற அமைப்பை உடைய நரம்புக் கருவி வீணை.
12. வீணை ஏழு நரம்புகளைக் கொண்டது.
13. பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
14. காற்றுக்கருவிகள் குழல், கொம்பு ,சங்கு.
15. கஞ்சக் கருவிகள் சாலரா, சேகண்டி.
16. நரம்புக் கருவிகள் யாழ், வீணை.
17. தோல் கருவிகள் முழவு, முரசு.
18. மீன் வடிவில் அமைந்த யாழ் மகர யாழ்.
No comments:
Post a Comment