எட்டாம் வகுப்பு இயல் 5 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 4 || TNPSC EXAMS
1. முல்லைக்குழல் ,ஆம்பல் குழல் ,கொன்றைக் குழல் என பல வகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல் சிலப்பதிகாரம்.
2." குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் "
என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் திருக்குறள்.
3. வேடவர் வேட்டையின்போது ஊதும் கருவி கொம்பு கருவி.
4. ஊதுக்கொம்பு, எக்காளம், சிங்கநாதம் ,துத்தரி போன்ற பல வகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின் போது இசைக்கப்படுபவை.
5. சங்கு ஒரு இயற்கை கருவி.
6. சங்கில் இருந்து வரும் ஒளியை சங்கநாதம் என்பர்.
7. வளமாக சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச் சங்கு என்பர்.
8. சங்க இலக்கியங்களில் சங்கை பணிலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
9. "சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையான்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாவை.
10. கோயில் கூட்டு வழிபாட்டின் போது இன்னிசை அரங்குகளிலும் இசைக்கப்படும் இன்றியமையாத கருவி சாலரா.
11. சாலரா பாண்டில் எனவும் அழைப்பர்.
12. சாலரா இக்காலத்தில் ஜால்ரா என்பர்.
13. வட்ட வடிவமான மணிவகையைச் சேர்ந்தது சேகண்டி.
14. சேகண்டியை சேமங்கலம் என்றும் அழைப்பர்.
15. கோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைக்கப்படும் கருவி சேகண்டி.
16. பலாமரத்தினால் செய்யப்பட்டு விலங்கு தோலினால் கட்டப்படும் கருவி திமிலையாகும்.
17. திமிலை மணற் கடிகார வடிவத்தில் அமைந்திருக்கும்.
18. திமிலை என்பதன் வேறு பெயர் பாணி.
19. சங்கொடு தாரை காளம் தளங்களில் என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் பெரிய புராணம்.
20. பறை என்பது விலங்கு தோலால் இழுத்துக்கட்டப்பட்ட கருவி.
21. பழங்காலத்தில் செய்திகளை தெரிவிக்க கோட்பறையை முழங்கினர்.
22. பகைவர்களின் ஆணரியை கவர செல்லும்போது ஆக்கொட்பறையை முழக்குவர்.
23. தற்காலத்தில் பறை என்னும் பெயரில் வழங்கப்படுகிறது தப்பு.
24. பறையை முழக்கி கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம்.
25. மத்து என்பது ஓசையின் பெயர்.
26. மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்கிறார் அடியார்க்கு நல்லார்.
27. எந்த இசைக் கருவியை முதற்கருவி என்று அழைப்பர் மத்தளம.
28. "மத்தளம் கொட்ட வரி சங்கம் இன்றுதா" இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் நாச்சியார் திருமொழி.
29. தமிழர்கள் போர் துணையாக கொண்ட கருவிகளில் முதன்மையானது முரசு.
30. பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்த மூன்று வகையான முரசுகள் படை முரசு, கொடை முரசு, மணமுரசு.
No comments:
Post a Comment