Wednesday, August 16, 2023

எட்டாம் வகுப்பு இயல் 5 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 3 || TNPSC EXAMS

 எட்டாம் வகுப்பு இயல் 5 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 3 || TNPSC EXAMS

8th tamil iyal 5


1. கூம்போடு மீப்பாய் கலையாது எனும் அடிகள் எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது புறநானூறு.

2. தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம்.

3. பிரம்பு என்பது கொடி வகையைச் சேர்ந்த தாவரம்.

4. பிரம்பின் தாவரவியல் பெயர் கலாமஸ் ரொடாங்.

5. பழந்தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து வைத்தவை பனையோலைகள்.

6. பானை வனைதல் ஒரு சிறந்த கலையாகும்.

7.ஒரு சொல்லின் பொருளை அறிய பயன்படுவது அகராதி.

8. பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள பயன்படுவது கலைக்களஞ்சியம்.

9. நகை, அழுகை, வீரமுள்ளிட 9 சுவைகளை வெளிப்படுத்தக் கூடிய கலை இசைகலை .

10. இசையின் வகைகள் இரண்டு.

11. இரண்டு வகைகள் குரல்வழி இசை, கருவி வழி இசை.

12. இசையின் இனிமைக்கு துணை செய்பவை இசைக்கருவிகள்.

13. இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் பாணர்.

14. "நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கி பாணன் சூடான் பாடினி அணியால்" என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு.

15. இசை கருவிகளின் வகைகள் தோல் கருவி, நரம்புக் கருவி, காற்று கருவி, கஞ்ச கருவி.

16. விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவி தோல் கருவி.

17. நரம்பு அல்லது தந்திகளை உடைய கருவி நரம்புக் கருவி.

18. காற்றை பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்று கருவிகள்.

19. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்க படுபவை கஞ்சக் கருவிகள்.

20. இடை சுருங்கிய ஒரு கைப்பறை உடுக்கையாகும்.

21. பெரிய உடுக்கை தவண்டை என்பர்.

22. சிறிய உடுக்கையை குடுகுடுப்பை என்பர்.

23. இறை வழிபாட்டின் போது குறி சொல்லும் போதும் உடுக்கை கருவி சேர்க்கப்படுகிறது.

24." தண்டுக்கை தாழந்தை சாரருடம் பயில்வார் "என்று கூறியவர் சம்பந்தர்.

25. ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்த கருவி குடமுழா.

26. குடமுழவின் வேறு பெயர் பஞ்ச மகா சப்தம்.

27. குழல்களை வேங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர்.

28. குழல்கள் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையது.

29. குழலின் நீளம் 20 விரல் நீளமுடையதாக இருக்கும்.

30. மூங்கில் மட்டுமின்றி சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன.




No comments:

Post a Comment