எட்டாம் வகுப்பு இயல் 5 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 2 || TNPSC EXAM
1. கலித்தொகை 150 பாடல்கள் கொண்டது.
2. கலித்தொகையின் பிரிவுகள் குறிஞ்சிக்கலி, முல்லைகலி, மருதக் கலி, நெய்தற்கலி, பாலைக்கலி.
3. கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார்.
4. கலித்தொகையில் நெய்திகளை பாடல்களை பாடியவர் நல்லந்துவனார்.
5. பசியால் வாடும் அலந்தவர்க்கு உணவு அளித்தல் நமது கடமை.
6. நம்மை இகழ்வாரை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
7. மறை பொருளை காத்தல் நிறை எனப்படும்.
8. இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
9. பாதுகாத்தல் என்பது அன்புடையோரை பிரியாது வாழ்தல்.
10. பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
11. அன்பு என்பது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
12. அறிவு என்பது அறிவற்றவர் கூறும் சொற்களை பொறுத்தல்.
13. செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
14. நிறை என்பது மறை பொருளை பிறர் அறியாமல் காத்தல்.
15. நீதி முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குவது.
16. பொறுமை என்பது தம்மை இகழ்வாரை பொருத்தல்.
17. சிந்து சமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
18. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
19. நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் களையழகு மிகுந்த மண் கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
20. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருட்கள் கிடைத்துள்ளன.
21. பானை செய்யும் சக்கரத்தின் வேறு பெயர் திருவை.
22. பானை செய்தலை பானை வனைதல் என்று சொல்வது மரபு.
23. மண்பாண்ட கலையின் இன்னொரு வளர்ச்சி நிலை தான் சுடுமண் சிற்பக்கலை.
24. மூங்கிலின் வகைகள் கல் மூங்கில், மலை மூங்கில், கூட்டு மூங்கில்.
25. கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூங்கில் கூட்டு மூங்கில்.
26. குழந்தையை படுக்க வைப்பது தடுக்குப் பாய்.
27. உட்கார்ந்த உண்ண உதவுவது பந்திப்பாய்.
28. உட்காரவும் படுக்கவும் உதவுவது திண்ணை பாய்.
29. திருமணத்துக்கு பயன்படுத்துவது பட்டுப்பாய்.
30. இஸ்லாமியர் தொழுகைக்கு பயன்படுத்துவது தொழுகை பாய்.
No comments:
Post a Comment