எட்டாம் வகுப்பு இயல் 5 இலக்கணம் பகுதி 1 || TNPSC EXMAS
1. ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல்.
2. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர்.
3. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை பண்பு முதலியவற்றின் உறுப்புகளோ, தொக்கி (மறைந்து)வருவது தொகைநிலைத் தொடர் எனப்படும்.
4. தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.
5. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அது வேற்றுமை தொகை எனப்படும்.
6. தொடரில் வேற்றுமை உருபு அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது உருபு பயனும் உடன் தொக்க தொகை.
7. காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை.
8. காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை என்று கூறும் நூல் நன்னூல்.
9. பண்பு பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையே ஆனா ஆகிய என்னும் பண்பு உருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை.
10. சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இரு பெயரொட்டு பண்புத்தொகை எனப்படும்.
11. உவமைக்கும் உவமைத்துக்கும் இடையில் போல போன்ற நிகர அன்ன முதலிய உவம உருபுகளில் ஒன்றும் மறைந்து வருவது உவமைத்தொகை.
12. சொற்களின் இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவது உம்மை தொகை.
13. ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட்டு வருவது எண்ணும்மை.
14. வேற்றுமை, வினை ,பண்பு, உவமை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள் அவை அல்லாத வேறு சொற்களும் மறைந்து வருவது அன்மொழித் தொகை.
15. அன்மொழித்தொகை என்பதனை பிரித்தறிதல் அல்+மொழி +தொகை.
No comments:
Post a Comment