Tuesday, July 11, 2023

TNPSC உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு – விடைக்குறிப்பு (ANSWER KEY ) வெளியீடு

 TNPSC உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு – விடைக்குறிப்பு (ANSWER KEY ) வெளியீடு


TNPSC சார்பில் அரசு சிறை மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையில் உதவி ஜெயிலர் ( ஆண் & பெண்) காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 1 ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில் அதற்கான விடை குறிப்புகள் வெளியாகி இருக்கிறது.

விடைக்குறிப்புகள் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு சிறை மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையில் காலியாக உதவி ஜெயிலர் (ஆண்) 54 பணியிடங்களும், உதவி ஜெயிலர் (பெண்) 5 காலியிடங்களை இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும்.

இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு மே 11 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. மேலும் எழுத்து தேர்வு ஜூலை 1 ஆம் தேதி காலையும் பிற்பகலும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது உதவி ஜெயிலர் ( ஆண் & பெண்) பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான விடை குறிப்பு வெளியாகி இருக்கிறது. தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விடைக்குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment