Namakkal Kavignar – நாமக்கல் கவிஞர்
புலவர் | கவிஞர் வெ.இராமலிங்கனார் |
பிறப்பு | நாமக்கல் மாவட்டம் – மோகனூர் |
பெற்றோர் | வெங்கட்ராமன் – அம்மணி அம்மாள் |
காலம் | கி.பி. 1888 முதல் 1972 |
சிறப்பு பெயர் | காந்தியக் கவிஞர் |
ஆசிரியர் குறிப்பு
- கவிஞர் வெ.இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டதில் உள்ள மோகனூரின் பிறந்தவர்
- இவரின் பெற்றோர் வெங்கட்ராமன் – அம்மணி அம்மாள்
- நாமக்கல் கவிஞர் தமிழறிஞரும், கவிஞரும் ஆவார்.
- “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்.
- முதலில் பாலகங்காதர திலகர் பேன்றவர்களின் தீவிரத்தால் ஈர்க்கப்ட்ட இவர் பின்னர் மகாத்மா காந்தியின் கொள்கையினால் ஆட்கொள்ளப்பட்ட பின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.
- கரூர் மற்றும் நாமக்கல் வட்டராக் காங்கிரஸ் தலைவராக பணியாற்றினார். தேசபக்தி மிக்க தமது பேச்சால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர்.
- 1932-ம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஓராண்டு சிறைத்தண்டணை பெற்றார்.
- தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக திகழ்ந்தவர்.
- இவருக்கு நடுவணரசு பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
- தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் எனப்பெருமையுடன் அழைக்கப்பெற்றார்.
- இவரின் காலம் கி.பி. 1888 முதல் 1972 வரையாகும். அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது.
- அரசு தலைமைச் செயலக பத்துமாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டபட்டுள்ளது
இவரது புகழ்பெற்ற மேற்கோள்கள் :
“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” “தமிழன் என்றோன் இனமுன்டு தனியே அதற்கோர் குணமுண்டு” தமிழன் என்ற சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள். கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” |
நாக்கல் கவிஞர் எழுதிய நூல்கள்
மலைக்கள்ளன் (நாவல்) | பிரார்த்தனை (கவிதை) |
திருக்குறளும் பரிமேலழகரும் | கம்பனம் வால்மீகியும் |
என்கதை (சுயசரிதம்) | அவனும் அவளுமு் (கவிதை) |
சங்கொலி (கவிலை) | மாமன் மகள் (நாடகம்) |
அரவணை சுந்தரம் (நாடகம் | தமிழ்த்தேவர் |
கீதாஞ்சலி | தமிழர் இதயம் |
நாக்கல் கவிஞர் எழுதிய நூல்கள்
இலக்கிய திறனாய்வு – 7 | மொழிபெயர்ப்புகள் – 4 |
கவிதை தொகுப்புகள் – 10 | சிறுகாப்பியங்கள் – 5 |
கட்டுரைகள் – 12 | சுய சரிதை – 3 |
புதினங்கள் – 5 | இசை நாவல்கள் – 3 |
No comments:
Post a Comment