Kavimani – கவிமணி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
புலவர் | கவிமணி தேசிய விநாயகனார் |
பிறப்பு | கன்னியாகுமரி மாவட்டம் – தேரூர் |
பெற்றோர் | சிவதாணு – ஆதிலெட்சுமி அம்மையார் |
காலம் | இருபதாம் நூற்றாண்டு |
நூல்கள் | மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச்செல்வம், ஆசிய ஜோதி |
ஆசிரியர் குறிப்பு
- கவிமணி தேசிய விநாயகனார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரிர் பிறந்தவர்
- இவரின் பெற்றோர் சிவதாணு – ஆதிலெட்சுமி அம்மையார்
- இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப, துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை.
- இவர் இயற்றிய பிற நூல்கள் மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச்செல்வம், எட்வின் ஆர்னால்டின் ஆசிய ஜோதியைத் தமிழில் தழுவி எழுதியுள்ளார்.
- இவரது காலம் 1876 – 1954
- கவிமணிக்கு தேரூரில் 1952-ல் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
- இவர் உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்
- உமர்கய்யாம் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர். இவரது முழுப்பெயர் கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம்.
- இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
- உமர்கய்யாம் பாடல்களில் இம்மை, மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் எழுதிய செய்யுள்களின் தொகுப்பை கவிமணி மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதில் 115 பாடல்கள் உள்ளன.
- வாழ்க்கைத் தத்துவத்தை இப்பாடல்கள் விளக்குகின்றன. (ரூபாய்த்-நான்கடிச் செய்யுள்)
- 2005-ல் இந்திய அரச முத்திரை வெளியிட்டு சிறப்பித்தது.
புகழுரைகள் :
👉 1940யில் '' கவிமணி '' பட்டம் பெற்றார்👉 '' தேசிய விநாயகத்தின் கவிப்பேறுமை தினமும் கேட்பது என்செவிப் பெருமை '' என்று சொன்னவர் - நாமக்கல் கவிஞர்👉 '' கவிமணியின் கவிதைகளை புரிந்து கொள்வதற்குப் பண்டிதராக வேண்டுவதில்லை , படிக்க தெரிந்த எவரும் பொருள் கொள்ளத்தக்க எளியநடை '' என்று சொன்னவர் - டி. கே. சண்முகம்
No comments:
Post a Comment