Thursday, July 6, 2023

பொதுத்தமிழ் - இலக்கணம் தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொடர்புடைய சான்றோரையோ அல்லது நூலையோ தேர்வு செய்தலே தொடரும் தொடர்பும் அறிதல் ஆகும்.

இதனை அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர் - அடைமொழியால் அறியப்படும் நூல்கள் என்றும் அழைக்கலாம்.


தொடர் :

இங்கு தொடர் என்று சுட்டிக்காட்டுவது ஒரு சான்றோரை அல்லது ஒரு நூலை புகழ்ந்தோ, வியந்தோ சொல்லும்படியான சொற்களைக் கொண்ட தொடர் ஆகும்.

தொடர்பு:

கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடருக்கு எந்த நூல் அல்லது எந்த சான்றோர் தொடர்பானவர் என்பதைக் குறிப்பதாகும்.

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்:

தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்

பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்

காவடி சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை

காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்

சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் - வேங்கட ராஜூலு ரெட்டியார்


உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்


சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்


சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை


சொல்லின் செல்வன் - அனுமன்


தமிழ் தென்றல் - திரு.வி.க.


வள்ளலார் - ராமலிங்க அடிகளார்


கிருத்துவக் கம்பன் - எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை


தனது கல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.


ஆசு கவி - காளமேகப் புலவர்.


எழுத்துக்கு - இளம்பூரணார்.

சொல்லுக்கு - சேனாவரையார்.

உரையாசிரியர் - இளம்பூரணார்.

உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்

தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி.

புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்

ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்

மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

கவிக்கோ - அப்துல் ரஹ்மான்

தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி

தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி - அகத்தியர்

தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி, உத்தம சோழ பல்லவராயன், இராமதேவர் (கல்வெட்டுகள்), அருண்மொழித் தேவர் - சேக்கிழார்

இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்

முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை

சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்

தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்

தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை

தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி


தமிழ் தாத்தா - உ.வே.சா


தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்


தமிழ் நாடக தலைமையாசிரியர்

நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்


உவமைக் கவிஞர் - சுரதா


தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்


தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்

குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர், தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன், பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு - வாணிதாசன்.

கவி யோகி - சுத்தானந்த பாரதி.


தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.

தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்

வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.
<
ஆசிய ஜோதி - நேரு

ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி

மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்

திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்

தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா

தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ

பண்டித மணி - கதிரேசன் செட்டியார்

சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்

வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி

பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்

தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன்

தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்

கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்

திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி - பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)

நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்.

தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மாலை.

மண் தோய்ந்த புகழினான் - கோவலன்

வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்

பொய்யா குலக்கொடி நதி - வைகை

கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்

நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை

கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை

தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்

தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்

நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்

தமிழ் கவிஞருள் அரசர் - திருத்தக்கதேவர்

தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன், பராங்குசன், சடகோபன் - நம்மாழ்வார்

சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி - ஆண்டாள்

குழந்தை கவிஞர் - அழ.வள்ளியப்பா

மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

சைவ சமயத்தின் செல்வி - மங்கையற்கரசியார்

திராவிட ஒப்பிலக்கண தந்தை - கார்டுவெல்

நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

நாவலர் - சோமசுந்தர பாரதி

இந்திய சினிமா தந்தை - தாதாசாகிப் பால்கே

ஆட்சி மொழிக் காவலர் - ராமலிங்கனார்

ஆஸ்தானக் கவிஞர் - நா.காமராசன்

கவியரசு - வைரமுத்து,கண்ணதாசன்

திருக்குறளார் - வி.முனுசாமி

கவிப்பேரரசு - வைரமுத்து

தசாவதாணி - செய்கு.தம்பியார்

பண்மொழிப் புலவர் - அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் - கரிகாலன்

திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் - முதலாம் ராஜராஜன்

சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு, தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர்- திருநாவுக்கரசர்

தோடுடை செவியன், காளி வள்ளல். ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல், திராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர் - திருஞான சம்பந்தர்

ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார் வன்தொண்டர், தம்பிரான் தோழர் - சுந்தரர்.

நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி - ஔவையார்

மும்மொழிப் புலவர் - மறைமலை அடிகள்

விஷ்ணுசித்தர் - பெரியாழ்வார்.

தேசியம் காத்த செம்மல்(திரு.வி.க), பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் - முத்துராமலிங்க தேவர்

திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திரிகூடராசப்ப கவிராயர்

இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்


அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்:

மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - சீவக சிந்தாமணி


தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. - திருக்குறள்



செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - சிலப்பதிகாரம்



இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை

நெடுந்தொகை - அகநானூறு

கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை

பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.

மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை

புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு

வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை

பாணாறு - பெரும்பாணாற்றுப்படை

பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு

புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை

வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்

சின்னூல் என்பது - நேமிநாதம்

வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை

திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் -பெரிய புராணம்

ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்

முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி

கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.

தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்

குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி

குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்

உழத்திப்பாட்டு - பள்ளு

இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை

அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

தமிழர் வேதம் - திருமந்திரம்

தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி - திருவாசகம்

தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்

குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.

திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.

புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு

தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.

தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.

கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்

வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்

இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்

இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.

பாவைப்பாட்டு - திருப்பாவை

பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்

 

No comments:

Post a Comment