இன்ஜினியர்களுக்கு தமிழக அரசு வேலை : அடிக்கும் ஜாக்பாட் !!
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியங்களில் காலியாக உள்ள 10,000த்துக்கும் மேற்பட்ட பொறியாளர் பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் புதிதாக, 10,000 பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது, 10,000 பணியிடங்களை அரசு நிரப்ப உள்ளது. இதற்கான பணிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடக்குமா, ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி நடக்குமா என்று தெரியவில்லை. தற்போது, காலி பணியிடங்களை அரசு கேட்டுள்ளது. இந்த விபரங்கள் கிடைத்தபின் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment