Bharathidasan - பாரதிதாசன் | TNPSC and TET Study in Tamil
புலவர் | பாரதிதாசன் |
பெற்றோர் | கனகசபை- இலக்குமி அம்மையார் |
காலம் | 29.4.1891 – 21.4.1964 |
சிறப்பு பெயர் | பாவேந்தர், புரட்சிக் கவிஞர் |
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, தமிழியக்கம், சேர தாண்டவம், தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், சஞ்சீவி பருவத்தின் சாரல், குறிஞ்சித்திட்டு | |
சாகித்திய அகாதெமி விருது | பிசிராந்தையார் – நாடகநூல் (1969) |
ஆசிரியர் குறிப்பு
- பாரதிதாசன் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். பாரதியார் மீது கொண்ட காதலால் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். இவரது காலம் 29.4.1891 – 21.4.1964
- இவரின் பெற்றோர் கனகசபை- இலக்குமி அம்மையார்.
- பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்று புகழப்படுகிறார்.
- பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே அவர் காலத்தின் உருவானது. இவர் பிறந்த ஊர் தற்போது புதுச்சேரி என அழைக்கப்படும் பாண்டிச்சேரி.
- பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு ஆகியவை கவிதை நூல்கள்.
- இவர் இயற்றிய மற்ற முக்கிய நூல்கள் இருண்ட வீடு, தமிழியக்கம், சேர தாண்டவம், தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார் (நாடகம்), சஞ்சீவி பருவத்தின் சாரல், குறிஞ்சித்திட்டு ஆகியவை ஆகும்.
- குயிலி என்னும் பெயரில் (கதை வடிவில்) திங்களிதழை நடத்தி வந்தார்.
- தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடியுள்ளார்.
- இவரது 1969-ல் பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கபட்டுள்ளது.
- இவரை தமிழக அரசு கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும், சிறந்த கவிஞருக்கு “பாவேந்தர் விருது” வழங்குகிறது.
- 1982-ல் இவரது பெயரில் திருச்சியில் “பாரதிதாசன் பல்கலைகழகத்தை” உருவாக்கியுள்ளது.
- புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பாரதிதாசன் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
- தமிழ் எங்கள் ஊர் என்பதாலே எவரையும் வெல்லுந்தரமுண்டு தமிழருக்கும் புவிமேல என முழக்கமிட்டவர். தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை பெண்ணடிமை, திராவிட இயக்கச்சிந்தனை, பொதுவுடைமை முதலானவற்றைப் பாரதிதாசன் கவிதைகள் வெளிபடுத்தின.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் “எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான பாவேந்தர் பாரதிதாசன் |
மெய் செல்லல் நல்லதப்பா – தம்பி என இளைஞர்களுக்கு உண்மையின் மகத்துவம் பற்றி பாடல் மூலம் எடுத்து இயம்புகிறார் பாரதி தாசன் |
- “புதியதோர் உலகம் செய்வோம்” “சங்கே முழங்கு” போன்றவை பாரதிதாசனின் இனியபாடல்கள் ஆகும்.
- தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை – பாரதிதாசன்
புகழுரைகள் :
💥 "அறிவுக் கோவிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன் " என்று பரதிதாசனை சொன்னவர் - புதுமைப்பித்தன்
💥 "பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி "
என்று சொன்னவர் - கு. ப.ரா
💥 "அவர்தம் பாடல்களை படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான் "
என்று சொன்னவர் - அ. சிதம்பரநாத செட்டியார்
No comments:
Post a Comment