Monday, July 10, 2023

9th July 2023 – நடப்பு நிகழ்வுகள்

9th July 2023 –  நடப்பு நிகழ்வுகள்

Tamil Nadu Current Affairs

9வது கட்ட அகழாய்வு பணி

  • சிவகங்கையின் கீழடியில் நடைபெற்ற 9வது கட்ட அகழாய்வு பணியில் தங்க அணிகலன், சுடுமண் சிற்பங்கள், கண்ணாடி மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள் உள்பட 183 தொல் பொருட்கள் போன்ற பொருட்கள் கண்பிடிக்கப்பட்டுள்ளன

தொடர்புடைய செய்திகள்

  • ஆதிச்சநல்லூர், சிவகளை, திருக்கோளூர் – தூத்துக்குடி
  • அரிக்கமேடு – புதுச்சேரி
  • கொடுமணல் – ஈரோடு
  • கீழடி – சிவகங்கை
  • துலுக்கர்பட்டி – திருநெல்வேலி
  • வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் (சாத்தூர்) – விருதுநகர்
  • கீழ்நமண்டி – திருவண்ணாமலை
  • பூதிநத்தம் – தருமபுரி
  • பொற்பனைக்கோட்டை – புதுக்கோட்டை
  • பட்டறைப்பெரும்புதூர் – திருவள்ளூர்

4வது கட்ட அகழாய்வு பணி

  • சிவகங்கையின் சிவகங்கையில் நடைபெற்ற 4வது கட்ட அகழாய்வு பணியில்   17 முதுமக்கள் தாழிகள் கண்பிடிக்கப்பட்டுள்ளன

தொடர்புடைய செய்திகள்

  • துலுக்கர்பட்டியின் நம்பியாற்றங்கரையில் நடத்தப்பட்ட அகழாய்வில் பானை ஓடுகள் திஈய, திச, குவிர(ன்) ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
  • விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண்பானை, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கூம்பு வடிவ விளக்கு, வட்ட வடிவ அகல் விளக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

பொற்பனைக்கோட்டை அகழாய்வு

  • புதுக்கோட்டையின் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற முதலாம் கட்ட அகழாய்வில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி (தோடு), கார்லியன் கல்லாலான சூதுபவள மணி கண்பிடிக்கப்பட்டுள்ளன

India Current Affairs

விவேகானந்தரின் சிலை

  • டார் எஸ் சலாம், தான்சானியா – மார்பளவு விவேகானந்தரின் சிலை 
  • வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைப்பு

வர்த்தகம்

  • இந்தியா – தான்சானியா இடையே சொந்த கரன்சியில் (செலவாணி) வர்த்தகம் – ரூ.52,873 கோடி
  • இந்தியா கரன்சி – ரூபாய்
  • தாய்லாந்து கரன்சி – ஷில்லிங்

தொடர்புடைய செய்திகள்

நாடுகள்பணத்தின் பெயர்
பாகிஸ்தான், இலங்கைரூபாய்
இங்கிலாந்துபவுண்டு
ஐரோப்பிய ஒன்றியம்யூரோ
ஆஸ்திரேலியா, கனடாடாலர்
ஜப்பான்யென்
சீனாயுவான்
சவுதி அரேபியாரியால்
மலேசியாரிங்கிட்
ஐக்கிய அரபு அமீரகம்திர்ஹாம்

எஸ்கே சிங்

  • தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் செயல் தலைவராக எஸ்கே சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

  • தமிழக அரசின் புதிய பொதுத்துறை செயலராக கே.நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • தமிழக அரசின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால்நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • சென்னை பெருநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பி.வாசுதேவன்

  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக பி.வாசுதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கம் – 1935
  • நாட்டுடைமை – 1949
  • 25வது ஆளுநர் – சக்தி தாஸ் (27.11.2017)
  • முதல் ஆளுநர் – சர் ஆஸ்போர்ன் ஏ ஸ்மித்
  • இந்திய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் – சுவாமிநாதன் ஜானகிராமன்

பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்சிஃபலைடிஸ்

  • அசுத்தமான நீரில் வாழும் மூளையை உண்ணும் அமீபாவால் அரிய வகை மூளை தொற்று நோய் உண்டாகிறது.
  • காய்ச்சல், தலைவலி, வாந்தி, பார்வை மங்குதல், வலிப்பு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்
  • கேரளா, ஆலம்புழை மாவட்டத்தின் பாணாவள்ளி பகுதியில் இந்நோய் பாதிப்பால் 15 வயது சிறுவன் பாதிப்பினால் இறந்துள்ளான்

சால்வெக்ஸ் (SALVEX)

  • கேரளாவின் கொச்சியில் இந்திய கடற்படை, அமெரிக்க கடற்படை இடையிலான 7வது கூட்டு கடற்படை பயிற்சி சால்வெக்ஸ் (SALVEX) எனும் பெயரில் நடைபெறுகிறது
  • இந்தியா சார்பில் ஐஎன்எஸ் நிரீக்ஷக் கப்பலும் அமெரிக்கா சார்பில் யுஎஸ்என்எஸ் சால்வோர் கப்பலும் பங்கேற்றுள்ளன

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான 21வது கூட்டு கடற்படை பயிற்சி வருணா எனும் பெயரில் நடைபெற்றுள்ளது
  • இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான விமானப்படை கூட்டுப் பயிற்சி வீர்கார்டியன் எனும் பெயரில் நடைபெற்றுள்ளது

ஜிமெக்ஸ் – 2023 (JIMEX)

  • ஜூலை 5 முதல் 10 வரை இந்தியா, ஜப்பான் இடையோன ஜிமெக்ஸ் 7வது கடற்சார் பயிற்சி கேரளாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகின்றது.

Sports Current Affairs

உலக ஸ்னூக்கார் சாம்பியன் ஷிப் – 2023

  • நீலகிரியின் குன்னூரை சேர்ந்த ஷாம் ஆல்வின் 17வயதிற்குட்பட்ட சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாடத் தேர்வாகியுள்ளார்
  • ஸ்னூக்கர் போட்டி கண்டுபிடிக்கப்பட்ட இடம் – நீலகிரி

உலக பாரா துப்பாக்கி சுடுதல் போட்டி

  • குரோஷியாவில் நடைபெற்ற உலக பாரா துப்பாக்கி சுடுதல் போட்டியில்
  • மகளிருக்கான 10மீ ஏர் ரைஃபிள் ஸ்டேண்டிங் எஸ்ஹெச்1 பிரிவில் அவனி லேஹோரா தங்க பதக்கம் வென்றுள்ளார்
  • மகளிருக்கான ஆர்1-10மீ ஏர் ரைஃபிள் ஸ்டேண்டிங் எஸ்ஹெச்1 பிரிவில் உனால்கர் தங்க பதக்கம் வென்றுள்ளார்
  • 25மீ பிஸ்டல் கலப்பு எஸ்ஹெச்1 பிரிவில் ராகுல் ஜாக்கர் தங்க பதக்கமும் அமீர் அகமது பாட் வெள்ளி பதக்கமும் நிஹல் சிங் வெண்கலம் பதக்கமும் வென்றுள்ளனர்.

No comments:

Post a Comment