தேசியம்-காந்திய காலகட்டம் IMPORTANT QUESTIONS -PART 1 (50)
1. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்தது இந்தியா திரும்பிய ஆண்டு-1915.
2. காந்தி பிறந்த ஆண்டு - 1869 அக்டோபர் 2 - குஜராத் போர்பந்தர்.
3. காந்தி தந்தை - காபா காந்தி.
4. காந்தி தாயார்- புத்லிபாய்.
5. போர்பந்தரின் திவானாகவும் பின்னர் ராஜ்கோட்டின் திவானாகவும் பொறுப்பு வகித்தவர் - காபா காந்தி. (காந்தி தந்தை).
6. காந்தி சட்டம் பயில்வதற்காக இங்கிலாந்துக்குக் கடல் பயணம் மேற்கொண்ட ஆண்டு – 1888.
7. காந்தி வழக்கறிஞர் பட்டம்பெற்ற பின்பு இந்தியாவுக்குத் திரும்பிய ஆண்டு -1891,-ஜூன்.
8. காந்தி டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயில்பயணம் மேற்கொண்டபோது எந்த ரயில் நிலையத்தில் முதல்வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் – பீட்டர் மாரிட்ஸ்பர்க்.
9. டிரான்ஸ்வாலில் உள்ள இந்தியர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்கள் தங்களுடைய குறைகளை உறுதியுடன் வெளிப்படுத்தி களைவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தியவர்- காந்தியடிகள்
10. டிரான்ஸ்வாலில் வசித்த இந்தியர்கள் தலை வரியாக எத்தனை பவுண்டுகளை செலுத்த வேண்டியிருந்தது - 3 பவுண்டுகள்.
11. காந்தியடிகளுக்கு யாருடைய எழுத்துக்களுடன் அறிமுகம் கிடைத்தது -டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின்.
12. கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது The Kingdom of Within You நூலின் ஆசிரியர் - டால்ஸ்டாய்.
13. அண்டு திஸ் லாஸ்ட் Undo this Last நூலின் ஆசிரியர் - ஜான் ரஸ்கின்.
14. சட்டமறுப்பு Cvil Disobedience நூலின் ஆசிரியர் - தாரோ.
15. காந்தி ஃபீனிக்ஸ் குடியிருப்பு நிறுவிய ஆண்டு -1905.
16. காந்தி டால்ஸ்டாய் பண்ணை நிறுவிய ஆண்டு - 1910.
17. ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி எந்த ஒப்பந்தத்தின்படி ரத்து செய்யப்பட்டது - ஸ்மட்ஸ்-காந்தி.
18. காந்தி அரசியல் குரு - கோபால கிருஷ்ண கோகலே.
19. தீன் காதியா முறை பின்பற்றப்பட்ட இடம் - பிகாரில் உள்ள - சம்பரான்.
20. இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தின் எத்தனை பங்கு பகுதியில் அவுரி (இண்டிகோ) பயிரிட வேண்டும் என்று ஐரோப்பியப் பண்ணையாளர்கள் கட்டாயப்படுத்தினர் – 3/20 பங்கு
21. சம்பரானுக்கு வருகை புரியுமாறு காந்தியடிகளைக் கேட்டுக்கொண்ட விவசாயி - ராஜ்குமார் சுக்லா.
22. நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்தவர் – காந்தியடிகள்.
23. அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் நடந்த ஆண்டு - 1918.
24. கேதா சத்தியாகிரகம் நடந்த ஆண்டு – 1918.
25. பிடிஉத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதிகாரங்களை வழங்கிய சட்டம் - ரெளலட் சட்டம்.
26. ரெளலட் சட்டத்தை கருப்புச் சட்டம் என்று அழைத்தவர் – காந்தி.
27. காந்தி ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக் அழைப்பு விடுத்த ஆண்டு - 1919 - ஏப்ரல் 6.
28. டாக்டர். சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் இரண்டு முக்கிய உள்ளூர் தலைவர்கள் போராட்டத்திற்கு தலைமையேற்றதால் கைது செய்யப்பட்ட நாள்-1919 - ஏப்ரல் -9 .
29. பீரங்கி வண்டி,ஆயுதமேந்திய வீரர்களுடன் சுற்றி வளைத்தவர் - ஜெனரல் ரெஜினால்டு டயர் . எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி சுடத்தொடங்கினார்கள்.
30. துப்பாக்கிச்சூட்டில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்- 379.
31. அதிகாரபூர்வமற்ற தகவல்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை - 1000 அதிகம் என்று தெரிவித்தது
32. படைத்துறைச்சட்டம் அறிவிக்கப்பட்டு அமிர்த்சாஸ், பஞ்சாப் மக்கள் சவுக்கடி கொடுத்கப்பட்டு தெருக்களில் தவழவிடப்பட்டார்கள்.
33. ஜாலியன் வாலாபாக் படுகொலை வீரத்திருமகன் (knighthood) என்ற அரசுப் பட்டத்தை திருப்பிக் கொடுத்தவர் - இரபீந்திரநாத் தாகூர்.
34. ஜாலியன் வாலாபாக் படுகொலை காந்தி திருப்பிக்கொடுத்த பதக்கம் - கெய்சர்-இ-ஹிந்த்.
35. யாருடைய தலைமையில் கிலாபத் இயக்கம நடந்தது - மெளலானா முகமது அலி மௌலானா செளகத் அலி .
36. அலி சகோதரர்கள் - மெளலானா முகமது அலி, மௌலானா செளகத் அலி .
37. 1919 -நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் – காந்தி.
38. அல்லாஹு அக்பர், வந்தே மாதரம், இந்து-முஸ்லிம் வாழ்க ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை முன்மொழிந்தவர் -செளகத் அலி.
39. எந்த ஆண்டு அலகாபாத்தில் கூடிய கிலாபத் குழுவின் கூட்டம் காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஓத்துழையாமை இயக்கத்தை ஏற்றுக்கொண்டது- 1920 ஜூன் 9.
40. ஒத்துழையாமை இயக்கம் எப்போது தொடங்கியது - 1920 ஆகஸ்டு முதல் நாள்.
41. கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கிய ஆண்டு - 1920 செப்டம்பர்.
42. 1920 டிசம்பர் நாக்பூரில் நடந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானம் யாருடைய தலைமையில் நிறைவேற்றப்பட்டது- சேலம் C. விஜயராகவாச்சாரியார்.
43. பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை காந்தி அறிவித்த ஆண்டு-
1922 -பிப்ரவரி.
44. எந்த நிகழ்வைத் தொடர்ந்து காந்தியடிகள் உடனடியாக வரிகொடா இயக்கத்தைத் திரும்பப் பெற்றார் - செளரி சௌளரா. (உத்திரப்பிரதேசம் கோராக்பூர்).
45. செளரி செளரா சம்பவம் நடைபெற்ற ஆண்டு - 1922 பிப்ரவரி 5.
46. அகிம்சை,ஒத்துழையாமை காரணங்களால் இயக்கம் தோல்வி காணவில்லை மாறாக போதுமான எண்ணிக்கையில் அவற்றில் பயிற்சி பெற்ற தலைவர்களும் தொண்டர்களும் இல்லாமல் போனதே காரணம் என்று நம்பியவர்– காந்தி.
47. 1923 ஜனவரி முதல் நாள் சுயராஜ்ஜியக் கட்சியை தொடங்கியவர்கள் - மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ்.
48. சட்டப்பேரவைகளில் இருந்து சுயராஜ்ஜிய கட்சி விலகிக் கொண்ட ஆண்டு - 1926.
49. இரட்டை ஆட்சி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு -1919.
50. மாகாண அரசின் அதிகாரங்கள் - ஒதுக்கப்பட்ட துறைகள், மாற்றப்பட்ட துறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது .
No comments:
Post a Comment