TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் இத முதல்ல கவனிங்க!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது துறைத்தேர்வுகளுக்கான தற்காலிக விடை குறிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது.
TNPSC அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது மார்ச் 13ம் தேதி அன்று துறை தேர்வுகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, துறைகளுக்கான தேர்வானது 15.05.2023 முதல் 25.03.2023 வரை சென்னை, டெல்லி உட்பட 39 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில், அன்று நடத்தப்பட்ட 122 கொள்குறி வகை தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தற்போது (13.06.2023) வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC AE (ECE) Exam – Online Course Mega OFFER!
இத்துறை தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் 14.06.2023 முதல் 20.06.2023 மாலை 5:45 மணி வரை ஒரு வார கால அவகாசத்திற்குள் உத்தேச விடைகள் மீதான தங்கள் ஆட்சேபனைகளை tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விவரங்களை பதிவிட்டு தெரிவித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த கால அவகாசத்திற்குள் இந்த செயல்முறைகளை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment