TNPSC Group 4 தேர்வின் மூலம் 15000 காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் குரூப் 4 தேர்வின் மூலமாக கட்டாயமாக இந்தாண்டு 15,000 காலிப்பணியிடங்களாவது நிரப்ப வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Group 4:
தமிழகத்தில் கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் குரூப் 4 தேர்வின் மூலமாக 10,000+ காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தேர்வு வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாகவே, ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் குரூப்-4 தேர்வின் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக குரூப் 4 தேர்வு நடத்தப்படாத நிலையில் எக்கச்சக்கமான காலி பணியிடங்கள் உருவாகி உள்ளது.
இது மட்டுமல்லாமல் பணியாளர்களும் பணி ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் இந்த ஆண்டு கட்டாயமாக 20,000 காலிப்பணியிடங்கள் வரைக்கும் நிரப்ப வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
தேர்வு வாரியமும் இந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வின் மூலமாக கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துவிட்டு 60 காலிப் பணியிடங்களை மட்டும் அதிகரித்தது.
இந்த அறிவிப்பினை எதிர்த்து கூடுதலாக 5000 காலிப்பணியிடங்களையாவது இந்த ஆண்டில் கட்டாயமாக நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment