TNPSC Assistant Professor தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Assistant Professor of Psychology–cum-Clinical Psychologist பதவிக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC Assistant Professor தேர்வு தேதி:
தமிழ்நாடு மருத்துவ சேவையில் சேர்க்கப்பட்டுள்ள உளவியல் உதவி பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் பணிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு TNPSC மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TNPSC 2023 குரூப் – 4 தேர்வு – சலுகை விலையில் அரிய வாய்ப்பு!
அதன் படி, கணினி அடிப்படையிலான தேர்வானது தமிழகத்தில் மார்ச் 14 ஆம் தேதி காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு நேரங்களில் நடைபெற்றது. தற்போது இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. 1:3/1:4 என்ற விகிதத்தில் திரைச் சான்றிதழ் சரிபார்ப்பில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பதிவேற்றிய ஆவணங்களின் அடிப்படையில் திரையில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment