Saturday, June 10, 2023

TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் 25,000 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!

 தமிழக அரசு துறையில் குரூப் 4 தேர்வின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் விரைவில் கலந்தாய்வு நடத்த பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


குரூப் 4:

தமிழகத்தில் இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வின் கீழ் ஆண்டுதோறும் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக 2 வருட இடைவெளிக்கு பிறகு 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது.


இந்த முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் விரைந்து கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தற்போது குரூப் 4 தேர்வின் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 20,000 பேரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment