Monday, June 26, 2023

TNPSC : டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஆய்வு உதவியாளர்கள் காலிப் பணியிடங்கள்! 36,000 முதல் 1.3 லட்சம் வரை சம்பளம்!

tnpsc jobs

டிஎன்பிஎஸ்சி சார்பில் புள்ளியியல், பொருளியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்நிலை பணிகளில் அடங்கிய ஆய்வு உதவியாளர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

        விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 25.07.2023.

TNPSC காலிப்பணியிட விவரம்

பணிவிவரம்                                          காலிப்பணியிடங்கள்

ஆய்வு உதவியாளர் (புள்ளியியல்) 1

ஆய்வு உதவியாளர் (பொருளியல்) 1

ஆய்வு உதவியாளர் (புவியியல்)         1

ஆய்வு உதவியாளர் (சமூகவியல்)   1

ஆய்வு உதவியாளர் (Evaluation and Applied Research Department) 2

சம்பள விபரம்

      ஆய்வு உதவியாளர் பணிகளுக்கு 36,200 – 1,33,100 மற்றும் 36,900 – 1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி

       சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு

     குறைந்தபட்சம் 18 வயதை எட்டியவர்களாக இருக்க வேண்டும்.

SC, SC(A), ST, MBC / DC, BC(OBCM), BCM மற்றும் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த கணவனை இழந்த பெண்கள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை. இதை தவிர பிற பிரிவுகளை சேர்ந்தவர்கள் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

STEP 1 : TNPSC இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

STEP 2 : முகப்பு பக்கத்தில் உள்ள ஆய்வு உதவியாளர் அறிவிப்பில் கிளிக் செய்யவும்.

STEP 3 : தற்போது ஆய்வு உதவியாளர் பணிக்கு கீழே உள்ள Apply Online என்பதை கிளிக் செய்யவும்.

STEP 4 : விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்து Apply Now என்பதை கிளிக் செய்யவும்.

STEP 5 : OTR எண் மற்றும் பாஸ்வோர்டை பயன்படுத்தி லாகின் செய்யவும்.

STEP 6 : விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விட்டு விண்ணப்பத்தை சப்மிட் செய்யவும்.

விண்ணப்ப கட்டணம்

    SC,SC(A), ST, MBC, DC, BC, BCM வகுப்பை சேர்ந்தவர்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

இதை தவிர பிற பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணமாக 150 மற்றும் 100 ரூபாய் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment