Thursday, June 29, 2023

TNPSC ஆணையத்தில் 245 சிவில் நீதிபதி காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இதுவே இறுதி வாய்ப்பு!

 TNPSC ஆணையத்தில் 245 சிவில் நீதிபதி காலிப்பணியிடங்கள் –   விண்ணப்பிக்க இதுவே இறுதி வாய்ப்பு!

   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Civil Judge பணிக்கென 245 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.27,700-44,770/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

    Civil Judge பணிக்கென காலியாக உள்ள 245 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

       அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

     இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 42 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

   தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.27,700- 44,770/- ஊதியம் வழங்கப்படும். 

salary

      இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  முதனிலை தேர்வு(Preliminary Examination), முதன்மை தேர்வு (Main Examination) மற்றும் Viva–Voce Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


No comments:

Post a Comment