Thursday, June 22, 2023

TNPSC தேர்வில் 15000 பணியிடங்களுக்கான அறிவிப்பு – வலுக்கும் கோரிக்கை!



தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்பட இருக்கும் நிலையில், 15000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புதல்: தமிழகத்தில் அரசுத் துறை பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாததால் பல காலியிடங்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது வெளியாகும் அறிவிப்பில் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு மேல் நிரப்பப்பட வேண்டும் என தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மமக தலைவர் ஜவாஹிறுல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தமிழக அரசு காலியிடங்கள் TNPSC என்னும் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வு மூலம் நிரப்பப்படுவது வழக்கமாக இருக்கிறது. மேலும் சட்டமன்ற பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி மூலமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாகவும், தனியார்துறை பணிநீக்கம் காரணமாகவும்,புதிதாக பட்டம் பெற்றவர்கள் என பலர் இருப்பதால் 10000 பணியிடங்கள் போதுமானதாக இல்லை. அதனால் தேர்வர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 15000 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும், ஆவின் போக்குவரத்து, மின்சார வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வாணையம் நிரப்பி உரிய நடவடிக்கை விரைவாக எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment