Tuesday, June 20, 2023

செம! குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு குட் நியூஸ்!

 

Good News For Tnpsc Examiners

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது TNPSC தேர்வர்களை குஷியாக்கி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4, குரூப்-2, க்ரூப்-2A, குரூப்-1 ஆகியவற்றில் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். 

கொரோனா தொற்று காரணமாக, கடந்த சில ஆண்டுகள் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. 2022 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. 

"மீனு தலை".. ப்ளீஸ், "மீன் தலை" மட்டும் கிடைச்சா விட்டுடாதீங்க.. தட்டில ஓரங்கட்டாதீங்க.. ஏன் தெரியுமா அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 

18 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் மூலம், 7 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. 

பின்னர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 காலிப் பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டது.

குரூப் 4 தேர்வு முடிவு கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான ஷெட்யூலை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. அதன்படி குரூப் 4 போட்டித் தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என்ற டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் அறிவிப்பு இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கடந்த 2022 ஜூலையில் நடைபெற்ற தேர்வில் தவறவிட்டவர்களுக்கு அடுத்து 2024 பிப்ரவரி மாதம் குரூப் 2 வாய்ப்பு கிடைக்கும். இதனால், கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதய தமனி பைபாஸ் ஆபரேசன்..எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி?..காவேரி மருத்துவமனை அறிக்கை இந்நிலையில், குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. 

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ஏற்கனவே 10,117-ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கூடுதலாக 631 பேர் குரூப் 4 வேலைவாய்ப்பை பெறுவார்கள்.

 இந்தச் செய்தி டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இன்னும் இந்த பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.



No comments:

Post a Comment