TNPSC CESSE தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வை பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தி உள்ளது. இதற்கான தேர்வு விடைக்குறிப்பு பற்றிய விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.
TNPSC CESSE தேர்வு தேதி:
ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வின் மூலம் Overseer / Junior Draughting Officer , Draughtsman மற்றும் Foreman ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கான எழுத்து தேர்வு Paper-I மற்றும் Paper – II என இரண்டு கட்டமாக நடைபெற்றது.
அதாவது, Paper-I (Subject paper) ஆனது 27.05.2023 அன்று காலை 09.30 A.M. to 12.30 P.M வரை நடைபெற உள்ளது. Paper – II Part-A – Tamil Eligibility Test மற்றும் Part-B – General Studies ஆனது 27.05.2023 அன்று மாலை 02.00 P.M. முதல் 05.00 P.M வரை நடைபெற்றது. இந்த தேர்வின் மூலம் மொத்தம் 1083 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான விடைக்குறிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு தேர்வு எழுதியவர்கள் எங்கள் வலைத்தளத்தை பின் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment