TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Oral Test தேதி வெளியீடு!
தமிழ்நாடு அரசுப்பணியாளார் தேர்வாணையத்தின் ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பணிகளுக்கான வாய்மொழித்தேர்வு நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Oral Test:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமை செயலாப் பணிகளில் அடங்கிய ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. தேர்வு முழுவதுமாக கணினி வழியாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் மே 8 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு 13.12.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி 21.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 22.2 .2023 அன்று நடத்தப்பட்டது.
வாய்மொழி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏப்ரல் 28ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதற்கான MEMO பக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 12.05.2023அன்று வாய்மொழித்தேர்வு நடத்தப்படும்.
No comments:
Post a Comment