டிஎன்பிசி போட்டி தேர்வுகளில் லட்சக்கணக்கான போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் அனைவருக்கும் வேலை கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. ஏனென்றால் குறைந்த காலி இடங்களுக்கு பல லட்சக்கணக்கானோர் போட்டியிடுவதால் அவற்றில் தகுதி உடையவர்மட்டுமே தேர்ந்தெடுக்க முடிகிறது.
அப்படி என்றால் மற்றவர்கள் தகுதி இல்லை என்று அர்த்தமா? நிச்சயமாக இல்லை. அவர்களும் தகுதி படைத்தவர்களே... ஆனால், முதன்மை மதிப்பெண் பெறுகிறார்கள் என்றால், போட்டி மிகுந்த இந்த சமுதாயத்தில் வெற்றி பெறுவது என்பது குதிரை கொம்பு தான்.
போட்டியிடுபவர்களில் பணிக்கு தேவையான காலி இடங்களில் ஒருவராக தன்னை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றால், நிச்சயமாக கடினமாக உழைக்க வேண்டி வரும். அனைத்து போட்டியாளர்களும் ஒரே மதிப்பெண்களை பெறுவதில்லை.
ஆனால் போட்டியிட்ட போட்டியாளர்களின் வரிசையில் முதல் 2000 அல்லது 3000 நபர்களுக்குள் தங்களுடைய மதிப்பெண்கள் அமைந்திருந்தால் தகுதியின் அடிப்படையில் நிச்சயமாக வேலையை பெறலாம்.
எப்படி தங்களை அந்த குறிப்பிட்ட நபர்களில் ஒருவராக உருவாக்கிக் கொள்வது.. எப்படி படித்தால் உடனடியாக முதல் போட்டி தேர்வில் அரசு வேலையை பெறலாம் என்ற ஒரு சூத்திரத்தை, கற்றல் முறையை நமக்கு இந்த வீடியோவில் வழங்கியிருக்கிறார் நண்பர்.
வீடியோவை பார்த்து அறிந்து தெரிந்து படித்து தெரிந்து கொண்டு அதன்படி உங்களுடைய கற்றல் முறையை மேம்படுத்தினால் நிச்சயமாக போட்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை கைப்பற்றலாம் என்பது நம் கருத்து.
No comments:
Post a Comment