2017-ம் ஆண்டு தொடங்கிய செல்வி S.சுபலட்சுமியின் UPSC பயணம், 2020-ல் TNPSC Group 1 தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம் பெற்று வெற்றியடைந்தது. இன்று அவர் திருவள்ளூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பணி செய்துவருகிறார்.
"நான் ஒரு EEE பட்டதாரி. கல்லூரி மூன்றாம் ஆண்டில் அரசாங்க வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. இறுதி ஆண்டில் அதற்கான பயிற்சியைத் தொடங்கினேன்.
படிப்பு முடித்த பின்னர் எனக்குத் தனியார் நிறுவனத்தில் பணி கிடைத்தது. சிறிது காலம் வேலை செய்து பின்னர் பணியை விட்டு முழுநேரப் பயிற்சியில் ஈடுபட்டேன். நான் தயார் செய்தது UPSC தேர்வுக்குத்தான். என் அப்பா எனக்கு முழு சப்போர்ட்.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் எனக்கு அரசுப்பணி கிடைத்தது. வேலைக்குச் செல்லாமல் பயிற்சி எடுப்பதும் ஒரு விதமாக மன அழுத்தத்தைத் தரும் என்பதால் பணியில் சேர்ந்தேன்.
இதுபோன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கு முக்கியமாக நாம் சிலபஸில் தெளிவாக இருக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி, நமக்கு எந்தெந்தப் பாடங்கள் நன்றாக வரும், எதில் பயிற்சி தேவை என்பது குறித்த சுய பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியம். அதில் தெளிவாக இருந்தால், பாடங்களை எளிதில் படிக்க முடியும்.
ப்ரீலிம்ஸ் தேர்வுக்காக மட்டுமே தயார் செய்துவிட்டு அதை க்ளியர் செய்யும் பட்சத்தில், அடுத்தது மெயின் தேர்வுக்குத் தயார் ஆகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே க்ளியர் செய்கிறோமோ இல்லையோ, மெயின் தேர்வுக்குப் பயிற்சி எடுக்க வேண்டும்.
இப்படி UPSC தேர்வுக்காகத் தயார் செய்தவேளையில்தான் Group 1 தேர்வை எழுதினேன். அதற்கு தனியாக எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை. UPSC பயிற்சிக்குக் கூடவே தமிழகத்திற்குப் பொருந்தும் வகையிலான வரலாறு, புவியியல் உள்ளிட்ட பாடங்களைப் படித்தேன்.
இப்படித் தேர்வுக்கு ஏற்றாற்போல் ஸ்ட்ராட்டஜியை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்கள் தோல்விகளைக் கண்டு மனம் தளரக்கூடாது.
கன்சிஸ்டென்சி என்பது மிகவும் முக்கியம். முதல் முறையே எதிர்பார்த்த முடிவு வரவில்லை என்று துவண்டுவிடக்கூடாது. நம்மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்தாலே நிச்சயம் வெற்றி பெற முடியும்” என்று கூறி முடித்தார் சுபலட்சுமி.
ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் UPSC, TNPSC தேர்வுகளுக்கான இலவச ஒருநாள் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தவிருக்கிறது. 1 வருட இலவசப் பயிற்சிக்கான Scholarship Test-ம் அன்று நடைபெறவிருக்கிறது.
சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் திரு.சங்கர் ஜிவால் IPS மற்றும் ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை ஆணையர் டாக்டர் தாரேஷ் அகமது IAS,
திருவள்ளூர் மாவட்டத் துணை ஆட்சியர் சுபலட்சுமி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து, உங்கள் சந்தேகங்களைத் தீர்க்கவிருக்கிறார்கள்.
நன்றி: ஆனந்த விகடன்
No comments:
Post a Comment