இருந்த மூன்று உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் இன்று ஓய்வு.... 13 உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டிய டிஎன்பிஎஸ்சியில் தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்
தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் டிஎன்பிஎஸ்சி பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம அரசு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்வதில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், நிரந்தர தலைவர் மற்றும் போதிய உறுப்பினர்கள் இல்லாமல் திண்டாடி வருகிறது .
நான்கு உறுப்பினர்களில் ஒருவர் தற்காலிக தலைவர் பொறுப்பை வகிக்கும் நிலையில், மீதம் இருக்கின்ற மூன்று பேரில் கிருஷ்ணகுமார் என்ற உறுப்பினர் இன்று ஓய்வு பெறுகிறார்.
அரசு துறைகளுக்கு தேவையான அலுவலர்கள் பணியாளர்களை தேர்வு செய்யும் முக்கிய பணியை டிஎன்பிஎஸ்சி செய்து வருகிறது. இந்த அமைப்பில் தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும்.
ஆனால் பல மாதங்களாக உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைவர் பணியிடமும் நிரந்தரமாக நிரப்பப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள நான்கு உறுப்பினர்களில், முனியநாதன் என்ற உறுப்பினர் தற்காலிக தலைவர் பதவியை வகித்து வருகிறார்.
மீதம் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், கிருஷ்ணகுமார் என்ற உறுப்பினர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
இதனால் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை இரண்டாக சுருங்கி இருக்கிறது. டி என் பி எஸ் சி அமைப்பிற்கு தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர் பணியிடங்களையும் நிரப்பாவிட்டால், டிஎன்பிஎஸ்சி பணிகள் வரக்கூடிய நாட்களில் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, வரும் ஜூன் மாதம் டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெறும் சைலேந்திரபாபு, டி என் பி எஸ் சி தலைவராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன . இதற்காகவே தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment