வணக்கம் அன்பு நண்பர்களே... ! லட்சக்கணக்கான நண்பர்கள் tnpsc தேர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் தங்களை தயார் செய்து வருகின்றனர். ஆனால் அதில் வெற்றி பெறுபவர்கள் மிக சொற்பமே. குறிப்பாக தொடர்ந்து தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் எக்ஸாம் தேர்விற்காக தங்களை தொடர்ந்து வருட கணக்கில் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் கூட சில நேரங்களில் தேர்வுகளில் வெற்றி பெற முடிவதில்லை.
ஆனால் ஓராண்டு அல்லது ஆறு மாதங்களில் புதியதாக தேர்வுக்கு தயாராகும் நண்பர்கள் அதில் வெற்றி பெறவும் செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பாடப்பகுதிகளை நன்று படித்துணர்ந்து புரிந்து கொண்டு தேர்வுகளை எதிர்கொள்வது தான்.
குறிப்பாக படித்த படிப்புகளை மீண்டும் நினைவில் ஓடச் செய்ய வேண்டும். . படித்த பிறகு அவ்வளவுதான் இனிமேல் நமக்கு தெரியும் என்ற ஒரு நினைப்பில் பெரும்பாலானோர் அந்த பாடப்பகுதியை திருப்புதல் செய்வதில்லை
எந்த ஒரு பாடமும் மனதில் நிற்பதில்லை. இதுதான் உண்மை. எனவே நீங்கள் எந்த ஒரு பாடப்பகுதியைப் படித்தாலும், மீண்டும் மீண்டும் அதை நினைவுபடுத்து பார்ப்பதன் மூலமாகவே உங்களது நினைவுத்திறன் மற்றும் பாடப்பகுதிகளை உட்பிரிக்கும் திறன் அதிகரிக்கும்.
குறைந்த நேரமே படித்தாலும் கூட அந்த குறிப்பிட்ட நேரத்தில் பாடப்பகுதியை த் தவிர மற்ற எதன் மீதும் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து படித்து வர, மிக விரைவில் நீங்கள் டிஎன்பிசி போட்டி தேர்வுகள் மட்டும் அல்லாமல் எந்த ஒரு போட்டி தேர்வுகளிலும் கூட உங்களால் எளிதில் வெற்றி அடைந்து அரசு வேலை வாய்ப்புகளை பெற முடியும். இங்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து காணொளி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பார்த்து தெரிந்து அறிந்து புரிந்து படித்து தேர்வில் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!
No comments:
Post a Comment