தமிழ்நாடு அரசின் தடவியல் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை அறிவியல் அலுவலர் பதவியை நிரப்புதவற்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் மே 26 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விளம்பர எண்.659 அறிக்கை எண்.10/2023 தேதி: 27.04.2023
மொத்த காலியிடங்கள்: 31
பணி: இளநிலை அறிவியல் அலுவலர்
துறைவாரியான காலியிடங்கள்:
1. வேதியியல் - 20
2. உயிரியல் - 4
3. இயற்பியல் - 3
4. இயற்பியல் மற்றும் வேதியியல்(பிரிவு: கணினி தடவியல் அறிவியல்) - 4
சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,36,100
வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி ஆ.தி, ஆ.தி(அ), ப.ப, மி.பி.வ, சீ.ம, பி.வ, பி.வ(மு) மற்றும அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மற்ற பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தடய அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட துறைகளில் எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் போதுமான தழிழறிவு பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: நிரந்தர பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விரிவான விரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.5.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment